அக்27/2013: முஸஃபர் நகர் கலவரத்தில் அனைத்தையும் இழந்து அனாதைகளாக அகதிகள் முகாம்களில் தங்கள் வாழ்க்கையைக் கழிக்கும் சிறுபான்மை முஸ்லீம் மக்களை பாக். உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. அணுகுகிறது என்று இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி கூறியதற்கு நாடு முழுவதும் கடும் கண்டனம் எழுந்துள்ளது.
காங்கிரஸ் தலைவரின் இந்தக் குற்றச்சாட்டை சிறுபான்மை முஸ்லிம் சமூகம் மோசமான கண்களுடன் பார்க்கப்படுகிறார்கள். இது ஆர்.எஸ்.எஸ் மற்றும் ஹிந்துதுவா வகுப்புவாத சக்திகளை வலுப்படுத்துவதோடு, வெந்த புண்ணில் வேல் பாச்சுவது போன்றதாகும். ஹிந்துத்துவா சக்திகள் ஏற்ப்படுத்திய கலவரத்தால் ஏற்கனவே பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்கள் சரிவர சென்று அடையாத இந்நிலையில் ராகுலில் பேச்சு அந்த மக்களை மேலும் வேதனை படுத்துவதாக அமைந்துள்ளது. ராகுல் காங்கிரஸ் கட்சியை வளர்கிறாரா? இல்லை பாரதிய ஜனதாவை வளர்கிறாரா? இதுவே நடுநிலையாளர்கள் மனதில் எழும் கேள்வி.
No comments:
Post a Comment