அக் 29: மோடிக்கு எதிரான வழக்கில் இன்று தீர்ப்பு: 2002-ஆம் ஆண்டு குஜராத் முஸ்லிம் இனப்படு கொலையில் நரேந்திர மோடிக்கு நற்சான்றிதழ் வழங்கிய சிறப்பு புலனாய்வுக் குழுவின் (எஸ்.ஐ.டி.) அறிக்கைக்கு எதிராக கொடூரமாக கொல்லப்பட்ட முன்னாள் காங்கிரஸ் எம்.பி. இஹ்ஸான் ஜாஃப்ரியின் மனைவி ஸாக்கியா ஜாஃப்ரி அளித்த மனுவின் மீது நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்க உள்ளது.
மோடி பங்கேற்ற கூட்டத்தில் குண்டு வெடிப்பு: இந்நிலையில், இந்தியாவின் பீகார் மாநிலத்தின் தலைநகரான பட்னாவில் நரேந்திர மோடியின் கூட்டம் ஒன்றில் தொடர்ச்சியாகக் குண்டுகள் வெடித்ததில் 6 பேர் பலியாகி உள்ளனர். இந்த தாக்குதல்களில் மேலும் பலர் காயமடைந்திருக்கிறார்கள். வெடிக்காத பல குண்டுகளும் அங்கு மீட்கப்பட்டுள்ளன.
திட்டமிட்ட சதி பீகார் முதல்வர் குற்றச்சாட்டு: பாட்னா குண்டு வெடிப்பு திட்டமிட்ட அரசியல் சதி என்று பிகார் மாநில முதல்வர் நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார். மத்திய, மாநில புலனாய்வு அமைப்புகளிலிருந்து இந்தத் தாக்குதல் குறித்து முன்னெச்சரிக்கை எதுவும் வரவில்லை. ஒரு பேரணிக்கு எந்தெந்த விதத்தில் பாதுகாப்பு வழங்க முடியுமோ, அந்த விதத்தில் பாதுகாப்பு வழங்கப்பட்டது.

குற்றவாளிகள் ஜார்கண்ட் மாநிலத்தை செர்ந்தவர்கள்: இந்நிலையில் பாட்னா குண்டுவெடிப்பை நிகழ்த்திய குற்றவாளிகள் என்று சந்தேகிக்கப்படும் நபர்கள் பிகாரின் அண்டை மாநிலமான ஜார்கண்டைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது. இத்தகவலை பிகார் மாநில காவல்துறை டிஜிபி (சட்டம்-ஒழுங்கு) எஸ்.என். பிரதான் தெரிவித்தார்.
சுதேசி கொள்கை பேசும்விதேசி: நான் ஏழ்மையில் பிறந்தவன், வறுமை என்னவென்று தெரியும்?” என்று முழங்குகிறார் மோடி. ஆனால், 80% மக்கள் ஒரு நாளுக்கு ரூ20 க்கும் குறைவான பணத்தில் வாழும் இந்தியாவின் பிரதமராகத்துடிக்கும் மோடி, உடுத்தும் ஆடைகள் முதல், போட்டுக் கொள்ளும் கண்ணாடி, எழுத பயன்படுத்தும் பேனா, கையில் கட்டும் கைக்கடிகாரம் வரை வெளிநாட்டை சேர்ந்தது,பெரும் செல்வந்தர்கள் பயன்படுத்துவது .
மத்திய உள்துறை அமைச்சரின் கருத்து: இந்தியாவின் முக்கிய எதிர்க்கட்சியும், இந்து தேசியவாத கட்சியுமான பாரதிய ஜனதாக் கட்சியின் பிரதமர் பதவிக்கான வேட்பாளரான நரேந்திர மோடியின் உரையை கேட்க்க கூடியிருந்த மக்கள் கூட்டத்தில் இந்த குண்டுகள் வெடித்துள்ளன. பீகாரில் நிகழ்ந்தது தீவிரவாத தாக்குதலா? அரசியல் சதியா? என்று தீவிர விசாரணை நடப்படும் என்று மத்திய உள்துறை இணை அமைச்சர் ஆர்.பி.என். சிங் கூறியுள்ளார்.
1 comment:
இந்தியன் முஜாகிதீன் அமைப்பினர் சம்பந்தப்பட்டு இருக்கலாம் எனக் கேள்விக்குறியுடன் செய்தி வெளியாகி உள்ளது.
மத்தியில் இருப்பது தங்களுக்கு ஆதரவான போலி மதச்சார்பின்மைக் கட்சி.பீகாரில் இருப்பது மோடியைப் பிடிக்காத கட்சி.இப்படி இருக்கும் போது
எப்படி இப்படி ஒரு செய்தி வருகிறது.
கடுகளவாவது உண்மை இல்லாமலா இருக்கும்.
வாழ்க வளமுடன்
கொச்சின் தேவதாஸ்
Post a Comment