Oct 30/2013: வகுப்புக் கலவர தடுப்பு மசோதாவை அனுமதிக்க மாட்டோம் என்று ஆர்.எஸ்.எஸ். விடுத்துள்ள அறிக்கை அமைதியை விரும்பும் இந்திய மக்களுக்கு எதிரான சவால் ஆகும்.
1927-ஆம் ஆண்டு முதல் இன்று வரை ஆயிரக்கணக்கான கலவரங்களின் மூலம் தன்னை வளர்ந்து வந்த RSS பயங்கரவாத இயக்கம் இந்த அறிக்கையின் மூலம் தனது உண்மையான முகத்தை உலகுக்கு காட்டியுள்ளது.
தேசத் தந்தை காந்தியடிகளையும், பல்லாயிரக்கணக்கான சிறுபான்மை மக்களையும் கொலை செய்து அவர்களின் இரத்தத்தில் ஹோலி கொண்டாடியவர்கள், இன்று வகுப்புவாத கலவரத் தடுப்புச் சட்ட மசோதா அமுலாக்கப்படுவதை தடுப்பதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை.
சமூகத்தின் அமைதியை கெடுக்கும் இத்தகைய அற்பர்களின் ஜம்பங்கள் எதுவும் தங்களது துணிச்சலை பாதிக்காது என்பதை பொறுப்புள்ள இந்திய குடிமக்கள் ஒவ்வொருவரும் நிரூபித்து காட்ட வேண்டும். நாம் எல்லோரும் சகோதர்கள் என்பதை நிரூபிக்க வேண்டும்.
ஹிந்து, முஸ்லிம், புத்தன் என்று இந்திய மக்களை பிரித்து அதன் மூலம் பிரிவினைவாதத்தை சக்திப்படுத்தும் சங்க்பரிவாரத்தின் சூழ்ச்சிகளை காணாதது போல் நடித்தால் இந்தியாவில் ஒரு மாபெரும் உள்நாட்டு யுத்தத்தை நாம் சந்திக்க வேண்டிய சூழல் ஏற்படும். ஒரு நாட்டிலே வாழும் சிறுபான்மை மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் பெரும்பான்மை சமூகத்தால் நசுக்கப்படும் பொழுது அதுவே ஒரு உள்நாட்டு யுத்தமாக மாறுகிறது என்பதை பொறுப்புள்ள யாரும் மறுத்து விட முடியாது.
கொடிய கொலைகளையும், இரத்தத்தை ஓடச் செய்வதையும் தங்களது வரலாறாக கொண்ட ஆர்.எஸ்.எஸ். இயக்கம் மொத்த ஹிந்து சமூகத்தின் பிரதிநிதிகளாக தங்களை காட்டிக் கொள்வது முரண்பாடானது. ஆர்.எஸ்.எஸ். தேசிய நிர்வாக குழுவில் முஸ்லிம் சமுதாயம் மற்றும் அமைப்புகளுக்கு எதிராக நிறை வேற்றப்பட்ட தீர்மானங்களும் அறிக்கைகளும் ஆர்.எஸ்.எஸ். நடத்தி வரும் மக்கள் விரோத தீவிரவாதச் செயல்களை தோலுரித்துக் காட்டும்.
3 comments:
மொட்டையா இப்படி ஒரு பதிவு இட்டால் எப்படி?
அவர்கள் எங்கே எப்போது என்ன அறிக்கை என்று முழு அறிக்கையையும் வெளியிட்டு அதன் பிறகு தங்களது கருத்தை வெளியிட்டிருந்தால்தானே நியாயம்.
அதை விடுத்து எதை தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலையில் இருந்தால் என் செய்வது?
வாழ்க வளமுடன்
கொச்சின் தேவதாஸ்
மிஸ்டர் கொச்சின் தேவதாஸ் அவர்களே இவர்கள் எதை பற்றி எழுதினாலும் இந்த லட்சணத்தில் தான் இருக்கும் வெறும் வெறுப்பும்,மத வெறியும், பொய்யும்,புனை சுருட்டும் அன்றி வேறு ஒரு மண்ணும் இவர்கள் எழுத மாட்டாகள்.இவர்களின் சேர்க்கை அப்படி.வெளிநாட்டு கூலிகள் அல்லவா? நீங்கள் படிப்பதோடு விட்டுவிடலாம்.கேள்வி கேட்டு ஒன்றும் இவர்களிடம் ஆகாது. எல்லோரும் மூளை சலவை செய்யப்பட்டவர்கள் அல்லவா?
please visit http://comparativestudy.blogspot.com/
Post a Comment