அக் 31/2013: இந்தியாவில் ரகசிய புலனாய்வு ஏஜன்சிகள் ஆர்எஸ்எஸ் ஸின் ஃபாசிச அஜண்டாவை நடை முறைப்படுத்துவதாக சோசியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியாவின் (எஸ்.டி.பி.ஐ.) தேசிய செயற்குழு குற்றம் சாட்டியுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் தேசிய துணை தலைவர் ராகுல் காந்தியை கூட ரகசிய புலனாய்வு பிரிவு, தனது ரகசிய திட்டத்தை நடைமுறைப் படுத்துவதில் உபயோகித்துள்ளது என்பதற்கான ஆதாரம்தான் அவரது முஸஃபர் நகர் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த அறிக்கை.
முஸஃபர் நகர் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யுடன் தொடர்புண்டு என்று அறிக்கை வெளியிட்ட ராகுல் காந்தி நிபந்தனையின்றி மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று தேசிய செயற்குழு தீர்மானத்தில் வலியுறுத்தியுள்ளது.
முஸஃபர் நகர் கலவரம் ஏற்பட்ட சூழலில் வகுப்புவாத கலவர தடுப்பு மசோதாவை பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடரில் நிறைவேற்ற ஐ.மு. அரசு தயாராக வேண்டும் என்று தேசிய செயற்குழுவின் இன்னொரு தீர்மானம் வலியுறுத்தியது.
பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கு ஆதரவான சூழலை உருவாக்குவதற்கான ஊடகங்களின் முயற்சிகளையும், பாட்னா குண்டு வெடிப்பையும் தேசிய செயற்குழு கண்டித்தது. நரேந்திர மோடி குஜராத் முதல்வராக பொறுப்பேற்றபோது மாநிலத்தின் கடன் 45,301 கோடி ரூபாய் ஆகும். ஆனால், தற்போது குஜராத் மாநிலத்தின் கடன் தொகை ரூ. 1.76 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.
பாட்னாவில் மோடியின் பேரணி நடந்த இடத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு தொடர்பாக பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும். குண்டுவெடிப்பின் மூலம் மோடியின் மீதான அனுதாபத்தை உருவாக்கும் முயற்சி நடப்பதாக தீர்மானம் குற்றம் சாட்டியது.
No comments:
Post a Comment