Oct 9, 2017

தீராத வயிற்று புண்ணை (அல்சரை) குணப்படுத்த!

அல்சரை குணப்படுத்த வேப்பிலைகுப்பை மேனனிவெந்தியமம் அருகம்புல்கடுக்காய்அத்தியிலை,  நெல்லி, கற்றாழை,  கோஸ், மிளகுசுக்கு, புதினா, கொத்தமல்லி, நன்னாரி,மணல்தக்காளி,  சுண்டைக்காய், பெருங்காயம், மஞ்சள்,  வசம்பு, சீரகம், வாழைத்தண்டு, மாதுளை, அகத்திக்கீரை முதலியவைகள் பயன்படுகின்றன.
இவைகளை சேகரித்து கேப்சூலாகவோபவுடராகவோ தயாரித்து சாப்பிடலாம். சராசரியாக ஒரு நாளைக்கு இரண்டு டீஸ்பூன் அளவு இந்த பவுடரை எடுத்து தண்ணீரில் கலந்து இரண்டு முறை சாப்பிட்டாலே போதும். எவ்வளவு நாள்பட்ட குடல் புண்ணாக இருந்தாலும் 4 மாதங்களில் பறந்து விடும்.


1). மாதுளம் பழத்தை மிக்சியில் போட்டு அரை த்து வடிகட்டி ஜூசாக எடுத்துக் கொள்ள வும். இத்துடன் தேன் கலந்து சாப்பிட வயிற்றுப் புண், வயிற்று வலி ஆகிய பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

2). அகத்திக் கீரையை தினமும் உணவில் சேர்த்தால் குடல் புண் குணமாகும்.  அத்திக் காயை சிறுபருப்புடன் சேர்த்து சமைத்து சாப்பிட்டால் அல்சருக்கு தீர்வு கிடைக்கும். 

3). அம்மான் பச்சரிசிக் கீரையுடன் மஞ்சள், ஓமம் இரண்டையும் சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் குடல் புண் குணமாகும். 

4). நெல்லிக்காய் சாறு எடுத்து அதில் தினமும் 30 மில்லி அளவுக்கு சாப்பிட்டால் குடல் புண் ஆற வாய்ப்புள்ளது. 

5). ஆடையொட்டி இலை, வில்வ இலை இரண்டையும் சம அளவில் எடுத்து பாலில் கலந்து குடித்தால் குடல் புண்கள் குணமாகும். 

6). பீட்ரூட்டை பிழிந்து சாறு எடுத்து தேனுடன் கலந்து சாப்பிட்டு வர அல்சர் குணமாகும்.


7). ஏலம், சுக்கு, கிராம்பு, சீரகம் - தலா 50 கிராம் எடுத்து பொடி செய்து கொள்ளவும். இதில் இரண்டு கிராம் அளவுக்கு தினமும் இரண்டு வேளை சாப்பிடலாம். இதன் மூலம் குடல் புண் மற்றும் வயிற்று வலி குணமாகும். 

8). கசகசாவை தேங்காய்ப்பாலில் ஊற வைத்துச் சாப்பிட்டால் வயிற்று புண் குணமாகும். 

9). சாணாக்கிக் கீரையை துவரம் பருப்பு சேர்த்து கடைந்து சாப்பிட்டால் வயிற்று புண்கள் குணமாகும். 

10). சோற்று கற்றாழை சாறில் பச்சை பயறை ஊற வைத்து, காயவைத்து பிறகு கஞ்சி காய்ச்சிக் குடித்தால் வயிற்று வலி, குடல் புண், குடல் நோய்கள் அனைத்தும் தீரும்.

No comments: