Nov 25, 2010

குஜராத் கலவர ரவுடி மோடியும், மோசடி எடியூரப்பாவும்: ஹிந்துதுவாவின் இருதலைகள்!!


Thursday, November 25, 2010பா.ஜ.கவின் இரு தலைகள்! நில ஊழலில் ஈடுபட்ட அவர் பதவியில் நீடிப்பதை அனுமதிக்கக் கூடாது என்று அத்வானி, முரளிமனோகர் ஜோஷி, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் திட்டவட்டமாக இருந்தனர். அதே போல ரெட்டி சகோதரர்களுக்கு நெருக்கமான சுஷ்மா சுவராஜூம் எடியூரப்பாவை மாற்ற வேண்டும் என்றார். மேலும் எடியூரப்பாவின் தீவிர எதிர்ப்பாளரான மூத்த பாஜக எம்பியான அனந்த் குமாரும், அவரது பதவியை பறிக்க வேண்டும் என்பதில் தீவிரம் காட்டினார்.

ஆனால், எனது சாதியைச் சேர்ந்த, எனது தீவிர ஆதரவாளர்களான 13 எம்எல்ஏக்களை என்னுடன் ராஜினாமா செய்ய வைத்து ஆட்சியைக் கவிழ்ப்பேன், மேலும் பாஜகவுக்குக் கிடைத்து வரும் எனது சமூகமான லிங்காயத்து சாதி ஓட்டுக்களை சிதறடிப்பேன் என்று எடியூரப்பா விடுத்த மிரட்டலால் பாஜக தலைவர்கள் அவருக்குப் பணிந்து விட்டனர்.

சித்தாந்தம், கலாச்சாரம், தேசீயம் என்று மார்தட்டிய ஹிந்துத்துவா கட்சிக்கு எதுவும் கிடையாது என்பது அம்பலமாகியுள்ளது. கட்சி, கட்டுப்பாடு என்பதெல்லாம் வெறும் பம்மாத்துதான். மக்களிடம் பிரிவினையையும், துவேஷத்தையும் வளர்ப்பது, அதில் குளிர் காய்வது, அதிகாரத்துக்கு வருவது என்ற அதன் திட்டத்தில் இப்போது ஊழலும் புகுந்து நாற்றமெடுக்க ஆரம்பத்திருக்கிறது. குஜராத் கலவர ரவுடி மோடியும்,மோசடி எடியூரப்பாவும் பா.ஜ.கவின் இருதலைகள்.

No comments: