
தற்போது "Kurtlar Vadisi - Filistin" (ஓநாய்களின் பள்ளத்தாக்கு - பாலஸ்தீனம்) என்ற துருக்கி சினிமா, இஸ்ரேலுக்கு எதிரான போரை, வெள்ளித்திரையில் முன்னெடுக்கின்றது. ஒரு உண்மைச் சம்பவத்தை(மாவி மர்மரா கப்பல் படுகொலை) அடிப்படையாக கொண்டு திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் திரைக்கதை, அதற்கும் அப்பால் நகர்கின்றது. சினிமா ஹீரோ (துருக்கி ஜேம்ஸ் பான்ட்) படுகொலைக்கு காரணமான இஸ்ரேலிய படையினரை தேடித் தேடி அழிக்கிறார். இது ஒரு கற்பனைக் கதையாக இருந்த போதிலும், கொடுமைக்கார வில்லன்களாக இஸ்ரேலிய படையினர் சித்தரிக்கப் பட்டுள்ளனர். அரேபியர்களை வில்லன்களாக சித்தரித்து தான் ஹாலிவூட் சினிமாக்கள் வெளிவந்துள்ளன. ஆனால், சினிமாவில் இஸ்ரேலியர்கள் வில்லன்களாக காட்டப்படுவதை இஸ்ரேலால் ஜீரணிக்க முடியவில்லை. அதனால் ஜனவரியில் உலகெங்கும் திரையிடப்படவிருக்கும் "குர்த்ளர் வாடிசி" சினிமாவை தடை செய்யுமாறு, இராஜதந்திர அழுத்தம் கொடுக்கப்படுகின்றது.
நன்றி செய்திகள்: கலையகம்.
2 comments:
அதி மேதாவிகள் என்ற நினைப்பில் கட்டுரைகள்.அத்தனியும் அசிங்கம்.கேவலம்.செக்ஸ் கட்டுரைகளை நீக்கு,இல்லாங்காட்டி பிளாக்கை மூடு
அன்புள்ள சகோதரருக்கு நாங்கள் ஒன்றும் அதிமேதாவிகள் என்று உங்களிடம் ஒருநாளும் சொல்லியது இல்லை. நீங்கள் பொத்தம் பொதுவா கட்டுரைகள் எல்லாம் அசிங்கம், கேவலம், செக்ஸ் என்று சொல்லிவிட்டீர்கள். எந்த கட்டுரை அசிங்கம் என்று நீங்கள் நினைகிறீர்களோ அதற்க்கு விமர்சனம் எழுதுங்கள். நீங்கள் விமர்சனம் எழுதிய கட்டுரையில் நீங்கள் சொல்லுவது போல் எதுவும் இல்லை. அடுத்து தவர்களை ஒருமையில் அழைக்கும் அதிகாரத்தை யாரும் உங்களுக்கு கொடுக்கவில்லை. அது போல் உங்களுக்கு கருத்து சொல்ல உரிமை இருக்கு தாராளமாக சொல்லுங்கள் உங்கள் கருத்துக்களுக்கு முடிந்த வரை பதில் அளிக்கப்படும். நீங்கள் ப்ளோக்கை மூட சொல்லும் அளவுக்கு இங்கு என்ன நடக்கிறது என்று புரியவில்லை. கருத்து எழுதியமைக்கு நன்றி.
Post a Comment