உலகில் உள்ள வளர்ந்த நாடுகளில் ஜப்பானும் ஒன்று. தொழில் வளம் மிக்க நாட்டில் தற்கொலை சாவுகளும் அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி முதல் நவம்பர் மாதம் வரை 11 மாதங்களிலும் மட்டும் 30 ஆயிரத்து 181 பேர் தற்கொலை செய்துள்ளனர்.
இந்த தற்கொலை விகிதம் கடந்த 12 ஆண்டுகளாக 30 ஆயிரத்துக்கு குறையாமல் அதிகரித்தப்படியே வருகிறது. இந்த தகவலை தேசிய போலீஸ் முகவாண்மை வெளியிட்டுள்ளது.
தற்கொலை சாவுகள் அதிகரித்து வரும் நாடுகளில் ஜப்பான் முன்னணியில் திகழ்கிறது என்று உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. எனவே, தற்கொலையை தடுக்கும் வகையில் அந்நாட்டு மக்களுக்கு கவுன்சிலிங் நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
உலகில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியிலும் ஜப்பான் சிக்கி தவிக்கிறது. இங்கு பலர் வேலையின்றி உள்ளனர். எனவே, தற்கொலைகள் அங்கு அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment