Oct 3, 2013

இன்று நள்ளிரவிற்குள் அமரிக்க அரசு கலைக்கப்படுமா?

Sep 03/2013: இன்று நள்ளிரவிற்குள் அமரிக்க அரசு மூடப்படலாம் அமரிக்க நேரப்படி இன்று நள்ளிரவிற்குள் அந்த நாட்டின் அரசிற்கு மூடுவிழா நடத்தப்படலாம். 

இந்த நிலை தவிர்க்க முடியாத நெருக்கடிக்கான தீர்வா என்ற ஆய்வுகள் எல்லாம் ஏற்கனவே வெளியாக ஆரம்பித்துவிட்டன. இன்றையை நள்ளிரவு வரையிலான ஊசலாட்டத்தின் பின்புலம் செனட் சபைக்கும் காங்கிரசுக்குமான பனிப்போராக வெளிப்படுத்தப்படுகிறது
.
அமரிக்க ஜனநாயகக் கட்சியினர் பெரும்பான்மையாகவுள்ள செனட் சபை குடியயரசுக் கட்சியினர் பெரும்பான்மையாக உள்ள அரச பிரதிநிதிகளால் அங்கீகரிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தை நிராகரித்துள்ளது. 54- 46 என்ற எண்ணைக்கை அடிப்படையில் திட்டம் நிராகரிக்கப்பட்டுள்ளது. பராக் ஒபாமாவினால் முன்மொழியப்பட்ட சுகாதார திட்டத்தை ஒரு வருடத்திற்கு பிற்போடுமாறு செனட் சபை கோரிக்கை விடுத்துள்ளது. இதற்கான முடிவை இன்று நள்ளிரவிற்குள் வழங்காவிட்டால் அமரிக்க அரசைக் கலைக்க வேண்டிய நிலை ஏற்படும்.

இதன் முதல் விளைவாக 7 லட்சம் அமரிக்க அரச ஊழியர்கள் எந்த முன்னறிவிப்புமின்றி வேலையிழப்பர். அவர்கள் மறுபடி வேலை பெற்றுக்கொள்வதற்கான எந்த உத்தரவாதமும் வழங்கப்படாது. அமரிக்கப் பங்கு சந்தை மட்டுமல்ல உலகம் முழுவதும் பங்குசந்தைப் பெறுமானங்கள் இன்று முடிவுகளுக்கு முன்பதாகவே வீழ்ச்சியடைந்துள்ளது. டலரின் பெறுமானம் ஏனைய நாணயங்களுக்கு எதிராக வீழ்ச்சியடைந்துள்ளது.

அரசிற்கு மூடுவிழா நடைபெறுமானால் அமரிக்க ஐரோப்பிய நாடுகளில் மட்டுமல்ல உலகம் முழுவதிலும் பெரும் நெருக்கடிகள் உருவாகும். முதலாம் உலகப் போரின் பின்னதாக
உலகம்  அமரிக்காவின் அரசியல் நகர்விலேயே அசைந்து கொண்டிருக்கின்றது. பல்தேசிய நிறுவனங்கள் எஞ்சியவற்றைச் சுருட்டிக்கொண்டு தலைமறைவாகத் தலைப்படும். வங்கிகளில் வைப்பிட்ட பணங்களை மீளப் பெறமுடியாதிருக்கும். பொருட்களின் விலை அதிகரிக்கும். சட்டம் ஒழுங்கு பாதிப்படையும்.

இன்றிரவு உலகம் பொருளாதார வீழ்ச்சியிலிருந்து தற்காலிகமாகத் தப்பிக்கொள்ண்டாலும் மிகக் குறுகிய காலத்துள் இது நிகழப் போவது தவிர்க்க முடியாத ஒன்று. 
ஓகஸ்ட் மாதம் 17 ம் திகதி அமரிக்க அரசின் கடன் தொகை அதன் உச்சத்தை அடையும். அதன் பின்னர் அமரிக்க அரசு சட்டப்படி கடன் பெற முடியாது. பெறப்படும் கடனுக்கு உத்தரவாதம் வழங்க முடியாது.
இதனால் கடனாளியாக அமரிக்கா என்ற நாட்டையே திவாலாக்குவதா அன்றி சென்ட் சபையின் சிக்கல் என்ற எல்லைக்குள் அரசை நிறுத்துவதா என்ற கேள்வியே இன்றைய கேள்வி. 
ஆக, இன்று இரவே அமரிக்க அரசைக் கலைத்துவிடுவதே வசதியானது என்றும், இதனால் பொதுமக்களிடமிருந்து பெற்றுக்கொண்ட கடன் தொகைகளை நீண்ட காலத்திற்குப் பிற்போடலாம் என்றும் சில ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

2 comments:

Anonymous said...

old and mokkai article...

Anonymous said...

/// சேலம் ஆடிட்டர் ரமேஷ் கொலையில் தேடப்பட்ட பயங்கரவாதி 'போலீஸ்' பக்ருதீன் சிக்கினான்! /// ஏன்? இந்த செய்திகள் படிக்க மட்டும் கண்கள் இல்லையோ? அமெரிக்காவின் பொருளாதாரம் பற்றி சரடு விட மட்டும் தெரிகிறதே? ஊசிப்போன வடையை வாங்க மாட்டார்கள் தம்பி.