Oct 3/2013: குற்ற வழக்குகளில் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெறும் எம்.பி., எம்.எல்.ஏ., எம்.எல்.சி. உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளின் பதவியைப் பாதுகாப்பதற்காக உத்தேசிக்கப்பட்ட அவசரச் சட்டத்தைத் திரும்பப் பெற மத்திய அமைச்சரவை புதன்கிழமை முடிவு செய்தது.
அத்துடன் மாநிலங்களவையில் கடந்த ஆகஸ்ட் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டு, நிலைக் குழுவின் பரிசீலனையில் உள்ள சட்டத்திருத்த மசோதாவைத் திரும்பப் பெற்றுக் கொள்ளவும் அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டது. இதையடுத்து, கடந்த ஒரு வாரமாக நீடித்து வந்த தொடர் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
No comments:
Post a Comment