இஸ்ரேல் பயங்கரவாத அரசு கடந்த சில தினங்களாக ஃபலஸ்தீனில் அப்பாவி மக்கள் மீது விமானங்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தி பெண்கள் மற்றும் குழந்தைகளை கொலை செய்து வருகிறது.
சர்வதேச போர் சட்டமுறைக்கு எதிரான முறையில் இஸ்ரேல் இந்த தாக்குதலை நடத்துவது கண்டனத்திற்குரிய செயலாகும். இந்த கொடுஞ்செயலை கண்டித்தும், மேலும் இந்தியா மற்றும் உலக நாடுகள் இஸ்ரேல் உடனான தூதரக உறவை துண்டிக்க வேண்டுமென வலியுறுத்தி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக சென்னையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
எஸ்.டி.பி.ஐ கட்சி ஐ.நா அலுவலக முற்றுகை போராட்டம்:

இஸ்ரேலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க மத்திய அரசையும், ஐ.நா வையும் வலியுறுத்தி, எஸ்.டி.பி.ஐ கட்சி ஐ.நா அலுவலக முற்றுகை போராட்டம் ஒன்றை நடத்தியது. கடந்த 8 ஆம் தேதி தொடங்கி தற்போது வரை 14 நாட்களாக பாலஸ்தீன் மக்கள் மீது இஸ்ரேல் நிகழ்த்தி வரும் கொடூர தாக்குதலில் இதுவரை 500 க்கும் அதிகமான அப்பாவி மக்களும், குழந்தைகளும் பலியாகியுள்ளனர்.
தொடர்ந்து வான்வழி மற்றும் தரைவழி மூலமும் கொடூர தாக்குதலை இஸ்ரேல் நடத்திவருகிறது. இஸ்ரேலின் இந்த காட்டுமிராண்டி தனமான தாக்குதலை இந்தியாவும் ஐ.நா வும் கண்டிக்க வேண்டும். இஸ்ரேலுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் மாபெரும் ஐ.நா அலுவலக முற்றுகை போராட்டம் சென்னை அடையாரில் உள்ள ஐ.நா வின் குழந்தைகள் நல அலுவலகமான யுனிசெப் அலுவலகம் முன்பு நடைபெற்றது.
No comments:
Post a Comment