Jan 8, 2013

காவேரி டெல்டா விவசாயிகளுக்கு நீதி கிடைக்குமா?

Jan 09: காவேரி நதி நீரை தமிழகத்துக்கு  தராமல், தொடர்ந்து கர்நாடகா அரசு, தமிழர்களை வஞ்சித்து வருகிறது.  மத்தியில் யார் ஆட்சி செய்தாலும், இதே நிலைதான் தொடர்கிறது.

காவேரி நதிநீர் பிரச்சனையால், தமிழக விவசாயிகளின் தற்கொலை சம்பவங்கள், நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இந்நிலையில், காவேரி தண்ணீரை டெல்டா விவசாயிகளுக்கு, பெற்று தர வக்கில்லாத மதிய அரசை கண்டித்தும், காவேரி டெல்டா விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ 45.000 நஷ்ட ஈடு வழங்க கோரியும், சோசியல் டெமாகரடிவ் பார்டி ஆப் இந்தியா, சார்பாக தஞ்சாவூரில் மாபெரும் ரயில் மறியல் போராட்டம், ஜனவரி 09/2013 இன்று நடத்தப்படுகிறது.

சிந்திக்கவும்: கர்நாடகா மாநிலம் இந்தியாவில்தான் இருக்கிறதா? அல்லது அது தனி நாடா? என்கிற கேள்வி நம்மில் பலருக்கும் எழுகிறது. கர்நாடகாவில் கனமழை பெய்து காவேரியில் வெள்ளம் வந்தால், அந்த தண்ணீரை தமிழகத்துக்கு திறந்து விட்டு தமிழகத்தை வெள்ளத்தில் மூழ்கடிப்பதும், தமிழகத்திற்கு விவசாயத்திற்கு தண்ணீர் தேவைபடும் பொழுது, அதை தர மறுப்பதுமாக "கர்நாடகா பாரதிய ஜனதா கட்சி" மனிதாபிமானம் இல்லாமல் நடந்து கொள்கிறது. நதிநீர்கள் இணைக்கப்பட்டு விவசாயிகள் வளம் பெறுவார்களா?

1 comment: