செப் 30/14: இந்தியா -அமெரிக்கா இடையிலான உறவு உறுதியானது என்று அமெரிக்கப் பத்திரிகையில் பிரதமர் நரேந்திர மோடியும், அமெரிக்க அதிபர் ஒபாமாவும் கூட்டாக அறிவித்துள்ளனர்,
இந்தியா - அமெரிக்கா இடையிலான உறவு உறுதியானது, நம்பகமானது, நிரந்தரமானது ஆகும். மேலும் எதிர்காலத்தில் விரிவடையக் கூடியதாகும்.
இரு நாடுகளுக்கும் இடையிலான உறவானது, முன்பை விட தற்போது அதிகரித்துள்ளது. இரு நாடுகளுக்கு இடையிலான ராணுவங்கள், தனியார் துறை ஆகியவைகளுக்கு இடையேயும் ஒத்துழைப்பு அதிகரித்திருக்கிறது. இரு நாடுகளின் ராணுவத்தினரும் பூமியில், கடலில், வானில் என பல்வேறு இடங்களில் கூட்டாக பயிற்சிகளில் ஈடுபடுவார்கள்.
இந்தியாவும், அமெரிக்காவும் உலக அளவில் கூட்டாளிகளாகும். பரஸ்பரம் உளவுத் தகவல்களை பரிமாறிக் கொள்வதன் மூலம், இரு நாடுகளும் தங்களது நாட்டில் பாதுகாப்பை அதிகரிக்க உறுதி பூண்டுள்ளன. தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கை, சட்டங்களை நடைமுறைப்படுத்துதல் ஆகியவற்றில் ஒத்துழைப்பை அதிகரிக்க முடிவு செய்துள்ளன. கடற்பகுதியில் அனைத்து நாடுகளின் கப்பல்களும் சுதந்திரமாக தொடர்ந்து இயக்கப்படுவதில் இரு நாடுகளும் உறுதி செய்யும். தெற்காசியாவை கட்டமைக்க இந்தியாவும், அமெரிக்காவும் உறுதி பூண்டுள்ளன.
சிந்திக்கவும்: பாரத மாதாகி ஜே! மாமியார் உடைத்தால் மண் குடம் மருமகள் உடைத்தால் பொன் குடம் என்கிற நம்ம ஊரு பழமொழி இந்த ஹிந்துத்துவா கோட்டான்களுக்கு (ஆந்தை) சரியாக பொருந்தும்.. நம்ம முண்டாசு தலைப்பா கட்டிய மண்ணு மோகன் பொருளாதார புலி இதையேதான் செய்தார். அவரை பார்த்து இந்த வர்ணாசிரம ஹிந்துத்துவா மதவெறி கும்பல் ஓலமிட்டன. சிங்கு என்ன செய்தாரோ அதை விட பன்மடங்கு அதிகமா செய்றார் நம்ம பவர் ஸ்டார் மோடி.
எங்கடா போச்சி உங்கள் சுதேசி கொள்கை, ஊழலுக்கு எதிரான நடவடிக்கை, சுவிஸ் பேங்க் பணத்தை திரும்ப கொண்டு வருவோம் என்று ஓலமிட்ட மோடி கும்பல் இன்று இந்தியாவை அந்நிய தரகு முதலாளிகளிடமும், முதலாளித்துவ நாடுகளிடமும் அடகு வைத்திருகிறார்கள். இனி வருங்காலத்தில் திருநெல்வேலி அல்வா, மணப்பாறை முறுக்கு, கோவில்பட்டி கடலை மிட்டாய், தூத்துக்குடி மக்ரூனி, அருப்புகோட்டை காரச்சேவு, மதுரை ஜிக்குருதண்டா, ஆம்பூர் பிரியாணி இவை அனைத்திற்கும் இனி அமெரிக்காகாரன்தான் விலை நிர்ணயம் செய்வான்.
முடிவாக ஆர்.எஸ்.எஸ். ஹிந்துத்வா கும்பலின் சுதேசி பிரதமர் மோடி தரகு முதலாளிகளின் அடிமை மன்மோகன் சிங்கின் வாரிசாகி இந்தியாவை அடகு வைத்தார். அமெரிக்க கொடிக்குள் ஐக்கியமாகிபோனது இந்தியா. முன்பு படையெடுத்து அந்நிய நாட்டை பிடித்து வளங்களை சுரண்டினார்கள். இன்றோ படையெடுக்காமல் கத்தியின்றி ரெத்தம் இன்றி ஒப்பந்தங்கள் மூலம் நாட்டை சுரண்டுகிறார்கள்.
*மலர் விழி*
3 comments:
பேத்தல்
ethavathu uruppadiya eluthu..kuppiyai eluthi time waste pannathe..
எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே! இங்கு பிறப்பினும் அயலான் அயலானே என்ற பாவேந்தரின் எச்சரிக்கை வரிகளை நாமும் சிந்திப்போம்!! தமிழர் நாடு தமிழர்க்கே. (ஆரியன் வந்தான்! சாதியையும் சாத்திரத்தையும் விதைத்தான் ஏமார்ந்தான் தமிழன்).
Post a Comment