JULY 16, நடிகர் வடிவேலுவின் மேனேஜர் சங்கர் நேற்று முன் தினம் போலீஸ் கமிஷனர் திரிபாதியை சந்தித்து புகார் மனு ஒன்று கொடுத்தார்.
அப்புகார் மனுவில், ரூ.45 லட்சம் பணம் கேட்டு, வடிவேலுவை ஒரு இணையதள ஆசிரியர் செல்வகுமார் போனில் பேசி மிரட்டுகிறார். மலேசியாவில் கலைநிகழ்ச்சி நடத்த ஒப்புக்கொண்டுவிட்டு வரவில்லை என்றும் இதற்காக பணம் தரவேண்டும்.
இல்லாவிட்டால் இணைய தளத்தில் தவறான தகவல்களை வெளியிட்டு அசிங்கப்படுத்திவிடுவேன் என்றும் அந்நபர் அடிக்கடி மிரட்டுகிறார். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இந்த நிலையில், வடிவேலு மீது இணையதள ஆசிரியர் செல்வகுமார் மோசடி புகார் மனு அளித்துள்ளார்.
அப்புகார் மனுவில், ‘’நடிகர் வடிவேலு மலேசியாவில் நடந்த நட்சத்திர கலை விழாவுக்கு வருவதாக முன்பணம் பெற்றார். 2007-ம் ஆண்டு மலேசியாவை சேர்ந்த மைக்கேல் கானாவிடம் ரூ.4 லட்சம் வாங்கினார். அந்த பணத்தை இன்றுவரை திருப்பித் தராமல் ஏமாற்றி வருகிறார்.
இந்திய தூதரகம் மூலமும் வடிவேலுக்கு பல கடிதங்கள் அனுப்பப்பட்டன. அப்போதைய முதல்வர் கருணாநிதிக்கும் கடிதம் அனுப்பப்பட்டது. ஆனாலும் பயன் இல்லை. கலை நிகழச்சிக்கு வடிவேலு போகாததால் ரூ.1 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே வடிவேலு மீது புகார் அளிக்க எனக்கு பொது அதிகாரபத்திரம் வழங்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் புகார் அளிக்கிறேன்’’ என்று கூறியுள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
""இந்திய தூதரகம் மூலமும் வடிவேலுக்கு பல கடிதங்கள் அனுப்பப்பட்டன. அப்போதைய முதல்வர் கருணாநிதிக்கும் கடிதம் அனுப்பப்பட்டது. ஆனாலும் பயன் இல்லை.""
எப்பிடி வரும் பதில்? அவிங்கதான் ஒண்ணுக்குள்ள ஒண்ணாச்சே..
அப்போ இனி என்ன பண்ணப்போறாரு??
-பணத்த எப்படா தருவே?
பணம் வரும்போது தருவேன்.
பணம் எப்ப வரும்?
அது.. தரும்போது வரும்.-
அந்த ஸ்டைல்ல ஏதாச்சும் பண்ணுவாருன்னு நெனைக்கிறேன்.
அண்ணே !
இந்த டீலிங் நமக்குள்ள இருக்கட்டும்னு சொல்லலியா?
சரியா சொன்னீங்கள் முத்தமிழ் தலைவர் கருணாநிதி நடிகர், நடிகைகளை வைத்து அரசியல் நடத்தலாம் என்று பார்த்தார் அதற்க்கு கிடைத்த அடிதானே இது. சும்மா தமிழ் தமிழ் என்று கூறி தன் குடும்பத்தை வாழ வைத்தார் மற்றபடி ஒன்றும் இல்லை.
ஒழுங்கா சிரிப்பு நடிகரா இருந்திருந்தா மக்கள் மனதில் நின்ருப்பார். அதை விட்டு அரசியலுக்கு ஆசைபட்டாதால் வந்த வினை. நூணலும் தன் வாயால் கெடும்.
அண்ணே பெயரில்லா பிட்ச்சை நூணல் தவளையாதனே சொல்லுவாங்கோ சரிங்களா அண்ணே!
Post a Comment