Jul 14, 2011

ஸ்ரீராமசேனாவின் உறுப்பினர்களுக்கு ராணுவ பயிற்சி!

JULY 15, பெங்களூர்: ஹிந்து தீவிரவாத அமைப்பான ஸ்ரீராமசேனா நடத்தும் பயங்கரவாத பயிற்சி முகாமில் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள் இளைஞர்களுக்கு   பயிற்சி அளிக்கின்றனர். பெல்காம் மாவட்டத்தின் அதானிக்கு அருகில் ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றவர்கள் ராணுவ
தாக்குதல் கலைகளை பயிற்சி அளித்து வருகின்றனர்.

மலேகான், ஹைதராபாத் மக்கா மஸ்ஜித் உள்ளிட்ட குண்டுவெடிப்புகளை நிகழ்த்திய ஹிந்துத்துவா பயங்கரவாதி கர்னல் புரோகித் அளித்த ராணுவ பயிற்சிக்கு சமமான பயிற்சியாகும் இது. ஸ்ரீராமசேனாவின் தேர்வு செய்யப்பட்ட 100 உறுப்பினர்களுக்கு அதிகாலை முதல் இரவு வரை பயிற்சி அளிக்கப்படுகிறது.

ஆயுதங்கள் உபயோகித்து நடத்தும் பயிற்சிக்கு போலீஸ் தடை விதித்துள்ளதால் ஆயுதங்கள் இல்லாமலேயே இத்தகைய பயங்கரவாத தாக்குதல் பயிற்சிகள் நடத்தப்படுகின்றன. இளைஞர்களை கொண்ட ஆயுதப்படையை உருவாக்கும் நோக்கில் இந்த பயிற்சி அளிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்ற 4 அதிகாரிகள் இப்பயிற்சியை அளிப்பதாக பிரமோத் முத்தலிக் தெரிவித்துள்ளார்.

தனது தொண்டர்களுக்கு போலீஸ் பயிற்சி அளிக்க வேண்டும் என பிரமோத் முத்தலிக் கோரியுள்ளார். துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களை உபயோகிப்பதற்கான அனுமதி இல்லாததால் கர்நாடகா போலீஸின் சிவிலியன் ரைஃபிள்ஸ் ட்ரைனிங் ப்ரோக்ராமில் கலந்துக் கொண்டு பயிற்சி பெற்று திரும்பி வர பிரமோத் முத்தலிக் இளைஞர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

மாநிலத்தின் பல பகுதிகளில் நடக்கும் சிவிலியன் பயிற்சியில் நுழைய ஸ்ரீராமசேனா தனது உறுப்பினர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. இதர மத சமூகங்களுக்கு எதிராக உபயோகிக்கும் தரத்தில் படையை உருவாக்க முத்தலிக் திட்டமிட்டுள்ளார். சமூகத்தில் வகுப்புவாத பிரிவினையை உருவாக்கும் முயற்சியில் இந்தியாவில் நடந்த பல்வேறு தீவிரவாத தாக்குதல்களின் வீடியோ காட்சிகளை பயிற்சியில் கலந்துக் கொள்ளும் உறுப்பினர்களுக்கு காட்டப்படுகிறது.

அதே வேளையில் ஸ்ரீராமசேனாவுக்கு போலீஸ் பயிற்சி அளிக்கமுடியாது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். போலீஸின் சிவிலியன் ரைஃபிள் பயிற்சியில் ஊடுருவ முடியாது என உயர் போலீஸ் அதிகாரிகள் கூறினர். வகுப்புவாத பிரிவினையை தூண்டுவதில் பிரசித்திப் பெற்ற ஸ்ரீராமசேனா பயங்கரவாத தாக்குதல் பயிற்சியை துவங்கி பல நாட்கள் கழிந்தபிறகும் போலீஸ் இதுவரை நடவடிக்கை மேற்கொள்ள தயாராகவில்லை.

1 comment:

Anonymous said...

ஒட்டு மொத்த இந்தியாவும் இந்து பயங்கரவாதத்திற்கு துணை போனாலும் மிகச்சிறிய இஸ்லாமியர் குழு
இவர்களை எதிர்கொள்ளும். ஆனால் அதனால் ஏற்படும் உயிர் இழப்புகள், பொருள் இழப்பை கணக்கிட்டால்
இந்தியா 100 , 200 வருடங்கள் பின்னோக்கி சென்றுவிடும். ஏற்கெனவே பட்டினி சாவுகளும், ஏழ்மையால் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொள்வதும் பெருகி வரும் வேளையில் இதுபோன்ற தேச பேரழிவு நடக்காமல் பாதுகாக்க அரசுதான் முன்னேச்செரிக்கைய்யாய் RSS போன்ற வகுப்பு
பயங்கர இயக்கங்களை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும். கடைசி தருணத்தில் வேறு வழியே இல்லாமல் ஆடு மாடுகளைப் போல் சாவதைவிட அழிக்க வரும் RSS போன்ற இந்து தீய சக்திகளை ஒழித்துவிட்டு தாமும் சாவதே மேல் என்ற எண்ணம் முஸ்லிம் முஸ்லிம்களிடம் சிறிது சிறிதாக மேலோங்கி வருவதை தவிர்க்க முடியாது. neethi virumbi