JULY 16, மதுரையில் மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் ஆதரவாளர் அட்டாக் பாண்டியன் கைது செய்யப்பட்டார்.
மதுரையில் திருமலை நாயக்கர் மகாலுக்கு எதிரில் ஈஸ்வரர் லால் என்பவருக்கு சொந்தமான கடை ஒன்றை கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு அத்துமீறி கைப்பற்றினார் அட்டாக் பாண்டியனின் கூட்டாளி திருச்செல்வம். கொலை மிரட்டல் விடுத்ததன் மூலம் ஈஸ்வரர் லால் இத்தனை நாளும் புகார் கொடுககாமல் இருந்தார்.
தற்போது மதுரை போலீஸில் புகார் கொடுத்தார். மதுரை தினகரன் தீ வைப்பு சம்பவத்தில் குற்றம் சுமத்தப் பட்டிருக்கும் அட்டாக் பாண்டியின் வழக்கு நிலையில் இந்த புகார் வந்ததால் போலீசார் அதிரடியாக களம் இறங்கினர். திடீரென்று இன்று மாலை அட்டாக் பாண்டி வீட்டுக்குள் நுழைந்து அவரை கைது செய்தனர். தற்போது ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment