கற்றோர்க்கு செல்லும் இடமெல்லாம் சிறப்பு, குற்றம் செய்தோர்க்கு செல்லும் இடமெல்லாம் இழுக்கு.
மோடியை கதாநாயகனாக சித்தரிக்கும் ஊடகங்கள் மறைத்த இந்த செய்தியை சமூக வலைத்தளங்களில் மறைத்து விட முடியாது.
அமெரிக்காவிற்கு சென்று அங்குவாழும் பல தேசிய இனங்களிடையே இந்தியில் மட்டுமே உரையாடி தன்னுடைய இந்திப் பற்றை நிலைநாட்டிய மோடிக்கு அங்கு இந்தியர்கள் யாரும் சிவப்பு கம்பள வரவேற்பை கொடுக்கவில்லை. மாறாக இந்தியர்கள் மோடியின் மீது நீதிமன்ற வழக்கை தொடுத்தனர். நீதிமன்றத்தில் மோடி நேரில் வந்து பதிலளிக்க வேண்டும் என்ற ஆணையை பிறப்பித்தனர்.
மேலும் சீக்கிய இனப்படுகொலைக்கும், குஜராத்தில் மோடி நடத்திய இஸ்லாமிய இனப்படுகொலைக்கும், இப்போது மோடி நடத்திவரும் இந்துத்வா திணிப்பிற்கும் எதிராக கடுமையான போராட்டங்களை முன்னெடுத்து உள்ளனர் அமெரிக்கா வாழ் இந்தியர்கள். இந்தியாவில் எங்கும் இது போன்ற போராட்டங்களை மோடிக்கு எதிராக யாரும் முன்னெடுக்கவில்லை. முன்னெடுக்கவும் முடியாது. மோடிக்கு எதிராக மட்டுமல்ல இந்தியாவிற்குள் நுழையும் பிறநாட்டு அதிபர்களுக்கு எதிராகக் கூட இப்படி ஒரு போராட்டம் இங்கு நடந்தது இல்லை.
ஆனால் அமெரிக்காவில் போராட்டம் செய்யும் உரிமையை அந்நாட்டு அரசு மக்களுக்கு வழங்கியுள்ளது என்பது மக்கள் உரிமையை அந்நாடு ஓரளவு மதிக்கிறது என்பதை காட்டுகிறது. மோடிக்கு எதிரான போராட்டப் படங்களை நீங்களே பாருங்கள். இப்படியான போராட்டங்கள் இந்தியாவிலும் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதை இப்படங்கள் உணர்த்துகிறது.
அமெரிக்கவில் மோடி செல்லுமிடமெல்லாம் இந்தியர்களடைய எதிப்பை தெரிவித்தனர். இந்தியாவில் செய்ய முடியாத காரியத்தை அமெரிக்க இந்தியர்கள், அமெரிக்கர்களும் செய்து காட்டினார்.
No comments:
Post a Comment