Sep 12, 2014

போராளிகளும் ட்ரோன் விமானங்களும்!

செப் 13: உலகமே ஆப்கான் முதல் ஈராக் வரை போரிடும் போராளிகளின் தாக்குதல் உத்திகளை கண்டு வியக்கிறது. 
அப்படிபட்ட போராளிகளை அச்சுறுத்துவதாக 'கில்லர் ரோபோ’. 'ட்ரோன்’ (Drone) எனப்படும் ஆள் இல்லா உளவு விமானங்கள் விளங்குகின்றன.

உண்மையில், இந்த ட்ரோன் உளவு விமானங்கள் நிலங்களை அளக்க, காட்டுத் தீயைக் கண்காணிக்க, மக்கள் கூட்டத்தைக் கண்காணிக்க என பல்வேறு சமூக பயன்பாடுகளுக்காக தான்  உருவாக்கப்பட்டது பின்னர் அதை உளவு வேலைகளுக்காகப் பயன்படுத்தினார்கள். ஒரு ட்ரோன் விமானம் மேகக் கூட்டங்களிடையே பறந்து நிலங்களைப் படம் பிடித்து அனுப்பும். அதில் போராளிகளின்முகாம்கள் இருந்தால், அடுத்ததாக போர் விமானங்கள் கிளம்பிச் சென்று தாக்குதல் நடத்தும். 

ஆனால் உளவு விமானங்கள் சத்தமின்றி எடுத்து அனுப்பும் படங்களை வைத்து போர் விமானங்கள் தாக்குதல் நடத்த வரும். போர் விமாங்கள் தளங்களை விட்டு புறப்பட்டு தாக்குதல் இலக்கை அடைவதற்குள் இவை புறப்பட்ட தகவலை அறிந்த போராளிகள்  தங்கள் கேம்ப்பை காலி செய்து விடுவார்கள். உளவு விமானங்கள் அனுப்பிய படங்களை மையமாக கொண்டு ஆளில்லாத இல்லாத வேற்று இடத்தில் குண்டுகளை வீசி விட்டுத் திரும்பும் ஏகாதிபத்திய போர் விமானங்கள்.

இதனால் ஏகாதிபத்திய நாடுகள் பெரும் நஷ்டத்திற்கு உள்ளாகின.  F -22 போர் விமானத்தை ஒரு முறை இயக்க, சுமார் 40 ஆயிரம் டாலர் செலவு ஆகும். இந்திய ரூபாயில் சுமார் 24 லட்சம் செலவாகும். இதனால் கடுப்பாகி போன ஏகாதிபத்திய அரசுகள் ட்ரோன் உளவு விமானங்களையே தாக்குதல் நடுத்தும் விமானங்களாக வடிவமைத்தன. இந்த ட்ரோன் விமானங்களில் சிறிய ஏவுகணைகளைப் பொருத்தி அனுப்பும் அளவுக்கு கொஞ்சம் பெரிதாக வடிவமைத்தார்கள். அதன் முன் பகுதியில் பவர்ஃபுல் கேமராவைப் பொருத்தினார்கள். அதை சேட்டிலைட்டோடு இணைத்தார்கள். ட்ரோன் உளவு விமானங்கள் 'கில்லர் ரோபோ’ என்ற பெயரோடு உருமாற்றம் பெற்றது. இந்த ட்ரோன் விமானங்கள் உளவு பார்த்ததும் தானே ராக்கெட்டுகளை வீசி இலக்கை அழித்து விடும். இதுதான் இன்றைய போராளிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கும்  விடயமாகும். 

No comments: