என் இனிய பொன் நிலாவே : என்னுடைய முதல் காதல் மறக்க முடியாதது. அவள் சின்ன பெண் எட்டு வயது குட்டி நிலா. நான் பனிரெண்டு வயது சுட்டி பையன். அவள் வீடு அடுத்த தெருவில். பள்ளிக்கு போகும் போது மட்டுமே அவளை பார்க்க முடியும். மற்ற நேரங்களில் அவளை காண முடியாது.
என் பார்வையில் விழுந்த அந்த குட்டி நிலாவின் பெயர் அப்போது எனக்கு தெரிய வில்லை. அவள் பிஞ்சு முகம் மட்டும் என் நினைவில் எப்பவும். தினமும் அவளை பார்க்கும் ஆவலில் பள்ளிக்கூட வாசலில் நான். பள்ளியின் எதிர் வரிசையில் அவள் வீடு. பள்ளி ஆரம்பிக்கும் வேலையில் என் குட்டி நிலா பள்ளிகூட வாசலில் வந்து வகுப்புக்குள் ஓடி விடுவாள். நானும் காத்திருந்து அவளை பார்த்துவிட்டு என் வகுப்புக்கு சென்று விடுவேன்.
என் குட்டி நிலாவை பள்ளிகூட வாசலில் மட்டும் பார்த்த எனக்கு திடீரென்று ஒரு இன்ப அதிர்ச்சி, நான் படிக்கும் டியுசனில் அவளும் சேர்ந்து விட்டாள். அன்று டியுசனில் அவளும் என்னை பார்த்தாள். தினமும் என்னை பார்ப்பாள். டியுசன் மிஸ் பெயர் சொல்லி அழைக்கும் போது அவள் பெயரும் எனக்கு தெரிந்தது. அவளுக்கும் என் மேல் காதல் துளிர்ந்தது என்பதை அவளது பார்வை மூலம் அறிந்து கொள்ள முடிந்தது. பிஞ்சு காதல் அன்பும், அக்கறையும் வெட்க பார்வையும் மட்டுமே எங்களுக்குள் இருந்தது.
படிப்பு, விளையாட்டு இவற்றுடன் அவளுடைய நினைவும் என் மனதில் ஆழமாக பதிந்திருந்தது. பள்ளி படிப்பு முடிந்தது தினமும் மாலையில் அவளை பார்பதற்காக அவள் வீட்டு தெருவில் சைக்கிளில் சுற்றுவது எனக்கு பிடித்திருந்தது . அவள் வீட்டு ஜன்னலில் என் பொன் நிலாவின் முகத்தை பார்க்கும் போது எனக்குள் ஒரு சந்தோஷ பரவசம். தினமும் தொடர்ந்த இந்த சந்தோசத்தை கெடுக்க அண்ணன்கள் ரூபத்தில் வில்லன்கள் தோன்றினார்கள்.
என்னுடைய சில நண்பர்கள் வழியாக எங்களுடைய காதல் அவளுடைய அண்ணன்களுக்கு தெரியவர. அவளுக்கு அவசரம் அவசரமாக வேறு மாப்பிளை பார்த்து திருமணம் முடிவு செய்து விட்டார்கள். அவளுடைய திருமண நாள் என் வாழ்கையில் வலி மிகுந்த ஒரு நாள். அன்று முழுவதும் கடற்கரை மணலில் படுத்திருந்த எனக்கு இரவில் வானத்தில் தோன்றிய முழு நிலாவை பார்த்ததும் என் இனிய பொன் நிலாவின் ஞாபகம் என்மனதில் ஓடியது. என் கண்களில் கண்ணீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. என்னுடைய முதல் காதல் என்வாழ்வில் மறக்க முடியாதது.

*மலர் விழி*
1 comment:
Heart Touching Love Story.
Post a Comment