Showing posts with label ஈழப்பிரியா. Show all posts
Showing posts with label ஈழப்பிரியா. Show all posts

Dec 31, 2012

பாலியல் வன்புணர்வை வைத்து அரசியல்!

Jan 01: பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு மரணம்  அடைந்த மாணவியை வைத்து நன்றாக அரசியல் நடத்துகிறார்கள் ஒட்டு பொருக்கி அரசியல் கட்சியினர்.

பயனற்ற அறிவிப்புக்கள்: 1) பலாத்காரத்துக்கு ஆளான டில்லி மாணவி உயிரிழந்ததை அடுத்து, புத்தாண்டு கொண்டாட்டத்தை ரத்து செய்வதாக ராணுவம் அறிவித்துள்ளது.

2) பலாத்காரத்துக்கு ஆளான டில்லி மாணவி உயிரிழந்ததை அடுத்து, குடியரசு தலைவரின் புத்தாண்டு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

3) பலாத்காரத்துக்கு ஆளான டில்லி மாணவி உயிரிழந்ததை  அடுத்து காங்கிரஸ் கட்சி சார்பில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் எதுவும் இல்லை  என்று சோனியா அறிவித்துள்ளார்.

* நீங்கள் புத்தாண்டு கொண்டாடினால் என்ன! கொண்டாடாமல் போனால் என்ன!  உருப்படியாக எதையாவது செய்வதை விட்டு நீலி கண்ணீர் வடிப்பதேன்*
*******************************
பயனுள்ள சில அறிவுப்புகள்: 1)  பஞ்சாப்பில், விசாரணை என்ற பெயரில் இனி பெண்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து விசாரணை நடத்தக் கூடாது என அம்மாநில முதல்வர், காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்

2). ஆபத்தில் சிக்கித் தவிக்கும் பெண்களுக்கான அவசர உதவி சேவை மையத்தை உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்யா தாக்கரே துவக்கியுள்ளார். மும்பை, புனே, நாசிக் போன்ற நகரங்களில் ஆண்டு முழுவதும் 24 மணி நேர சேவையாக இந்த மையம் செயல்படும்

3). பாலியல் வன்முறை வழக்குகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்த வழக்குகள் ஆகியவற்றை விசாரிக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் மகளிர் விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும். விரைவில் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கும் வகையில், தொடர்ச்சியாக தினசரி வழக்குகளை நடத்தி விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.
*******************************
சிந்திக்கவும்: இந்திய பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும். பாலியல் வன்புணர்வு செய்பவர்கள் வழக்கை ஒரு மாதத்துக்குள் விசாரித்து மரணதண்டனை வழங்க வேண்டும். அதற்காக சிறப்பு நீதிமன்றங்கள் உருவாக்கப்பட வேண்டும்.

இதில் சாதாரண குடிமகன் முதல் ராணுவம், போலீஸ், எம்.பி., எம்.எல்.ஏ. யாராக இருந்தாலும் நீதி ஒரே சமநிலையில் பேணப்பட வேண்டும். பாலியல் வன்புணர்வு வழக்குகளை விசாரிக்க தனியாக ஒரு துறை அமைக்கப்பட வேண்டும். அந்த துறை முற்றிலும் நேர்மையான அதிகாரிகளை கொண்டு நிரப்பப்பட வேண்டும். அந்த துறையின் நடவடிக்கைகளில் தலையிட அரசியவாதிகளுக்கோ, அதிகாரம் படைத்தவர்களுக்கோ உரிமை அளிக்கப்பட கூடாது.

இப்படி ஒரு துறையை அமைத்து பாலியல் வன்புணர்வில் ஈடுபடும் கயவர்களை ஒரு மாதத்திற்குள் மரணதண்டனை விதித்தால் இனி ஒரு கயவனும் பெண்களை இதுபோன்ற எண்ணத்தில் பார்க்க பயப்படுவான். ஈழத்திலே, காஷ்மீரிலே, சத்தீஸ்கரிலே பெண்களை கற்பழித்த இந்திய இராணுவத்தினர், காவல் நிலைய கற்பழிப்புகளை நடத்திய இந்திய காவல்துறையினர் இவர்களின் பெயர்களை பெட்டியலிட்டு இவர்கள் மீது சுமத்தப்பட்ட வழக்குகளை மீள் விசாரணை செய்து தண்டிக்கப்பட வேண்டும். அப்பொழுதுதான் நீதி முறையாக செயல்படுகிறது என்கிற நம்பிக்கை ஒவ்வொரு குடிமகனுக்கும் வரும்.
******************************* 
ரௌத்திரம் பழகு
*ஈழப்பிரியா*




 

 

Oct 26, 2012

கொடிக்கு கொடுக்கும் மரியாதை கூட தமிழனுக்கு இல்லை!


Oct 27: தேசியக் கொடியை சூரிய உதயத்தின் பின் ஏற்றி சூரிய அஸ்தமனத்திற்கு முன் இறக்கிவிடவேண்டும். கொடியை இறக்கும் பொழுது, மெதுவாக தரையில் படாமல் கைகளில் ஏந்தி எடுக்க வேண்டும். இரவு நேரங்களில் தேசியக் கொடியை ஏற்றுவதோ, பறக்க விடுவதோ கூடாது.

ஆனால் சுதந்திர தின பொன்விழா, வெள்ளிவிழா போன்ற நிகழ்சிகளில் பறக்க விட அனுமதி உண்டு. தேசியக் கொடியை ஊர்வலத்தில் எடுத்துச் செல்லும் போது முதல் வரிசையில் வலது புறத்தில் எடுத்துச் செல்ல வேண்டும்..

வேறு கொடிகள் முன்வரிசையில் இருந்தால் ஊர்வலத்தின் முன்னே நடுவில் எடுத்துச் செல்ல வேண்டும். சாயம் போன தேசியக்கொடியை பயன்படுத்தக் கூடாது. முக்கியஸ்தர்களுக்கு மரியாதை அளிப்பதாக கருதி தேசியக் கொடியை தாழ்த்தி பிடிக்கக்கூடாது.

சிந்திக்கவும்:  உயிரில்லாத துணியிலான ஒரு கொடிக்கு கொடுக்கும் மரியாதையை கூட உயிருள்ள தமிழனுக்கு கொடுப்பதில்லை நமது இந்திய அரசு. இந்த கொடியினால் உருவாகும் தேசபக்தி இந்த தேசபக்திக்கு விலை ஈழத்திலே படுகொலை செய்யப்பட்ட இலச்சக்கணக்கான உயிர்கள்.

தேசபாதுகாப்பு என்று சொல்லி ஆயுதங்களில் பல்லாயிரம் கோடிரூபாய்கள் முடக்கப்பட்டு அவை துருபிடித்து போகின்றன. மனிதர்கள் வாழ்வதற்குத்தான் நாடும், சட்டங்களும் ஆனால் இங்கே மனிதர்களை கொன்று வேற்று தேசியமும், தேசபக்தியையும் வைத்து என்ன செய்ய?

காவிரியில் இருந்து நமக்கு தண்ணீர் கிடையாது, தமிழக மீனவர்களை இலங்கை ராணுவம் கொன்று குவிக்கும்போது நமது கடல்படையால் நமக்கு பாதுகாப்பு கிடையாது, கொடிக்கு கொடுக்கும் மரியாதை கூட தமிழ் இனத்திற்கு இல்லையா?
ரௌத்திரம் பழகு
...ஈழப்பிரியா...

Sep 28, 2012

வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது!

Sep 29: காவிரி விவகாரத்தில் கர்நாடக அரசின் முடிவுக்கு ஆதரவாக, அக்.3ம் தேதி பெங்களூர் தமிழ்ச்சங்கம் அறப்போராட்டம் நடத்தவுள்ளது.

மேலும், அக்.6ம் தேதி கன்னட அமைப்புகள் அறிவித்திருக்கும் கர்நாடக முழு அடைப்பிற்கு, கர்நாடக வாழ் தமிழர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்குமாறு பெங்களூர் தமிழ்ச் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.

பாவம் பெங்களூர் தமிழர்கள், அவர்களுக்கு இதை விட்டால் வேறு வழியும் இல்லை. காவேரி விவகாரத்தில் அமைதிகாத்தால் கன்னட வெறியர்கள் மூலம் கலவரங்கள் வாயிலாக சொத்துக்களையும், உயிர்களையும் இழக்க நேரிடும்.

தமிழர்கள் என்கிற ஒரே காரணத்துக்கு நாம் எல்லா நிலைகளிலும் புறக்கணிக்கப்படுகிறோம். இப்படிப்பட்ட இந்தியா ராஜியத்தொடு நாம் சேர்ந்திருக்க வேண்டுமா? என்பதை ஒவ்வொரு தமிழனும் முடிவு செய்ய வேண்டிய தருணம் இது. காவேரி விவகாரத்தில் உச்ச நீதி மன்றத்தின் உத்தரவுகளையும், தீர்ப்புகளையும் ஆரம்பம் முதல் கர்நாடக அரசு தனது காலில் போட்டு மிதித்தே வந்துள்ளது.

அது இப்பொழுதும் தொடர்கிறது, கர்நாடகாவில் வாழும் தமிழர்கள் கனட வெறியர்களால் இதுவரை பட்ட துன்பங்கள் போதும். இப்படி போராட்டம் நத்துவதுதான் உங்களுக்கு பாதுகாப்பு என்றால்! அதையே நீங்கள் மேற்கொள்ளலாம். பெங்களூர் தமிழ் சங்கத்தையும், கர்நாடக தமிழர்களையும், தமிழக தமிழர்கள் யாரும் தவறாக எண்ண வேண்டாம். சொந்த இனத்தை வஞ்சித்து உயிர்வாழ வேண்டிய நிலையில்தான் வெளிமாநிலங்களில் வாழும் தமிழன் இருக்கிறான்.

மகாராஷ்ட்ராவில் அணு உலை வேண்டாம்! கூடங்குளத்தில் மட்டும் வேண்டு. தண்ணீர் தரமாட்டார்களாம்! நாம் மின்சாரம் மட்டும் கொடுக்க வேண்டுமாம்! என்ன ஒரு அநியாயம், எப்படியெல்லாம் நாம் வஞ்சிக்க படுகிறோம். இதை பற்றி பேசினால் நம் தேசபக்த வடவர்கள் இந்தியா 2020 ஒளிரப்போகிறது, இதுவெல்லாம் அந்நிய சதி என்பார்கள். ஆட்சியாளர்கள் மக்கள் போராட்டங்களை நசுக்க எடுத்த ஆயுதமே அந்நிய சதி.

Sep 4, 2012

வரலாறு எங்கும் வீரம்! வீரத்தின் விளைநிலம் ஈழம்!

Sep 05: மத்திய பிரதேச மாநிலம் சாஞ்சி என்னும் ஊரில் புத்தர் விழா ஒன்று நடைபெற இருக்கிறது. புத்தர் 2060 என்று அழைக்கப்படும் இந்த விழாவுக்கு பயங்கரவாதி ராஜ பக்சேவை அழைத்துவர BJP கட்சியின் முக்கிய தலைவர்களுள் ஒருவரான சுஷ்மா ஸ்வராஜ் பெரிதும் முயற்சி செய்கிறார்.

தமிழர் விடுதலை போராளிகளுடன் நேருக்கு நேர் போர்செய்ய தைரியம் அற்ற பவுத்த இனவெறியன் கோழை ராஜபக்சே இந்தியா என்கிற வல்லரசு வெறியனிடமும், ஆசியகண்டத்தின் ரவுடிப்பயல் சீனாவிடமும், குள்ளநரி பாகிஸ்தானிடமும் படைகளை பெற்று தமிழர் சுதந்திர தாகத்தை அழித்தான்.

வரலாறு எங்கும் போராளிகளின் வீரம் வைரவரிகளால் வரையப்பட்ட அதேநேரம் எட்டப்பனாக இந்தியாவையும், கோழையாக சிங்கள இனவாதத்தையும் வரலாறு பதியத்தவரவில்லை. உலகிலேயே வான், கடல், தரை என்று முப்படைகளும் வைத்திருந்து இந்தியா வல்லரசின் ராணுவத்தை புறமுதுகு காட்ட செய்தவர்களும் நம் தமிழர்களே.

May 1, 2012

முதலாளிகளுக்கு நன்றியோடு வாலாட்டும் அரசு இயந்திரங்கள்!

May 02: இந்திய குடிமக்களில் 65 சதவீதம் பேர் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழ்கிறார்கள்.

இந்த விடயத்தை நேசனல் சாம்பிள் சர்வேயின் அறிக்கை தெரிவிக்கிறது.

இந்த சர்வேயின் அடிப்படையில் ஒரு இந்திய குடிமகனுக்கு நகரங்களில் அன்றாட வாழ்க்கைக்கு தேவை ரூ.66.10 ஆகும்.
கிராமங்களில் 35.10  ரூபாய் ஆகும்.

இதன் அடிப்படையில் ஒருவருக்கு ஒரு மாதம் நகரங்களில்1984 ரூபாயும், கிராமங்களில் 1054 ரூபாயும் அன்றாட அடிப்படைச் செலவு ஆகும்.

Mar 28, 2012

மன்மோகன் என்கிற சாத்தான் வேதம் ஓதுகிறது!

March 29: அணு சக்தி பயங்கரவாதம் எதிர்காலத்தில் உலகிற்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் என மன்மோகன் சிங் திருவாய் மலர்ந்துள்ளார்.  

அணு ஆயுதம் இல்லாத நிலையே உலகிற்கு பாதுக்காப்பானது என்றும் கூறியுள்ளார். தென்கொரியா தலைநகரில் நடக்கும் சர்வதேச அணு சக்தி மாநாட்டில் கலந்து கொண்டார் இந்திய பிரதமர் மன்மோகன் சிங்.

அதில் அவர் பேசியதாவது, அணு சக்தி பயங்கரவாதம் குறித்து இந்தியா விழிப்புணர்வோடு உள்ளது என்றும்  ரசாயனம், உயிரியல், மற்றும் கதிர்வீச்சு ஆயுதங்கள் பரவுவதை குறித்து தடுக்கும் ஐநாவின் தீர்மானத்தை நீடிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

Feb 25, 2012

நீதி வெல்லுமா? ராஜபக்சேயின் அரசு தண்டிக்கப்படுமா?

FEB 26: ஈழத்தமிழர்களின் 35 வருடகால இன போராட்டத்தை இந்தியா போன்ற வல்லாதிக்க கழுகுகளின் துணை கொண்டு   ஒன்றரை இலட்சம் மக்களை கொன்று ஜூன்  2009 ல் முடிவுக்கு கொண்டு வந்தது இலங்கை பேரினவாத அரசு.

ஐக்கிய நாடுகள் சபை என்ற போலி அமைப்பு ஈழத்தில் போர் நடந்த காலங்களில் மவுனித்து இருந்தது. இப்பொழுது  எல்லாம் முடிந்த பின் இலங்கைக்கு எதிரான தீர்மானங்களை கொண்டு வரப்போகிறது ராஜபக்சேவை தண்டிக்கப்போகிறது என்பது நம்பமுடியாத விடயமாகவே இருக்கிறது.

இருந்தாலும் ஈழத்தமிழர்களின் நம்பிக்கையாக ஐரோப்பிய நாடுகளும், அமெரிக்காவும் திகழ்கின்றது. இதில் அமெரிக்க முழு வீச்சோடு ஈழத்தமிலர்களுக்கு துணை புரிந்தால் இதில் எதிர்பார்த்தது நடக்கும் சாத்திய கூறுகள் உண்டு. இந்நிலையில் வரும் திங்கட்கிழமை ஐக்கிய நாடுகளின் மனித உரிமை சபையின் 19 ஆவது கூட்டத்தொடர் ஆரம்பிக்கிறது.

Feb 5, 2012

நடிகை கொஞ்சியதும் மனம் உருகினார் இந்திய பிரதமர்!

FEB 06: இந்தி நடிகரும், ஹேமாமாலினியின் கணவருமான தர்மேந்திராவிற்கு இந்தாண்டு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டிருந்தது.

தர்மேந்திரா BJP யின் பஞ்சாப் மாநில எம்.பி.,யாக இருந்தவர். அவரது மனைவி ஹேமாமாலினி தற்போது BJP யின் ராஜ்யசபா எம்.பி.,யாக உள்ளார். எப்படி தர்மேந்திராவிற்கு விருது கிடைத்தது?

Jan 27, 2012

கேடுகெட்ட சுகாதாரத்துறை! 100 குழந்தைகள் பலி!

JAN 28: மேற்கு வங்க மாநிலம் மால்டா மாவட்டத்தில் கடந்த 1-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை சுமார் 100 பச்சிளம் குழந்தைகள் பலியாகியுள்ளதாக சுகாதாரத்துறையின் மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

சிந்திக்கவும்: 26  நாட்களுக்குள் நூறு குழந்தைகள் சாவு என்று சுகாதாரத் துறையின் மூத்த அதிகாரியே ஒத்துக்கொள்கிறார் என்றால் சாவின் எண்ணிக்கை எத்தனை மடங்காக இருக்கும் என்று யோசித்துக் கொள்ளுங்கள். இப்படி கேடுகெட்ட ஒரு சுகாதாரத்துறை நமக்கு தேவையா?

Jan 12, 2012

மத்திய அரசுக்கு மனிதாபிமானம் இருக்கிறதா?

JAN 12: தமிழக மீனவர்களை நடுக்கடலில் தாக்குவதையும், இந்திய கடல் எல்லையில் மீன் பிடித்து கொண்டிருக்கும் மீனவர்களை கடத்தி செல்வதையும் இலங்கை கடற்படையினர் வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

மத்திய, மாநில அரசுகளை கண்டித்து பல்வேறு போராட்டங்கள் நடத்தப்படும் இந்த தொடர் தாக்குதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கமுடியவில்லை. இந்தநிலையில் நாகையை சேர்ந்த 13 மீனவர்கள் கடத்தப்பட்டு உள்ளனர்.

Dec 14, 2011

முல்லை பெரியாறு, கூடங்குளம்! ஒருங்கிணையும் தமிழர்கள்!

சீமான்: தமிழர்களுக்கு சொந்தமான தேவிகுளம், பீர்மேடு பகுதிகளை தமிழகத்தோடு இணைக்கவேண்டும். முல்லைப்பெரியாறு அணை பிரச்சினையில் கைது செய்யப்பட்டுள்ள தமிழர்களை விடுதலை செய்யவேண்டும், அம்பேத்கார் திரைப்படத்தினை வரி நீக்கி தமிழக அரசே திரையிடவேண்டும்.

கூடங்குளம் அணு உலை ஆபத்து இல்லை என்கிறார்கள். அணுகுண்டு வெடித்தால் ஆபத்தா, இல்லையா? கூடங்குளத்திற்கு தமிழகத்தில் ஆபத்தில்லை என்று சொல்லும் நாராயண சாமி, புதுச்சேரியில் அணு உலை கூடம் நியமிக்கத்தயாரா? 30 ஆயிரம் கோடி செலவு என்கிறார்கள். சேது திட்டம் கோடிக்கணக்கில் செலவு செய்யப்பட்டது. அத்திட்டம் என்னவாயிற்று?

பழ.நெடுமாறன்: சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோரின் மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி மனித உரிமை இயக்கங்களின் தேசிய கூட்டமைப்பு சார்பில் சென்னை ஐகோர்ட் வளாகத்தில் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது. பழ.நெடுமாறன் முதல் கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார்.

உதயகுமார்: கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூட வலியுறுத்தி கடந்த 4 மாதமாக அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.இந்த நிலையில் மத்திய நிபுணர் குழு நாளை  3 வது கட்டமாக மாநில குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.


இதுபற்றி போராட்ட குழு தலைவர் உதயகுமார் கூறியதாவது, எங்களது வல்லுனர் குழு 70 பக்க அறிக்கையை தயாரித்து உள்ளது. நாங்கள் ஏற்கனவே கேட்ட 49 கேள்விகளுக்கு மத்திய குழு மேம்போக்கான பதிலை தந்துள்ளது. 4 கேள்விகளுக்கு பதில் இல்லை என்று கூறினார்.


கேரளத்தினர் வெறி:
இடுக்கி மாவட்டத்தில் வசித்து வந்த தமிழர்கள் 40 குடும்பத்தினர் கேரளத்தினரால் அடித்து விரட்டப்பட்டுள்ளனர். இதனால்  உயிருக்கு பாதுகாப்பு தேடி தமிழக எல்லைக்கு வந்துள்ளனர். அவர்கள் போடி அருகே கோணாம்பட்டி கிராமத்தில் தங்கள் உறவின்ர்கள் சிலர் வீட்டில் தஞ்சம் புகுந்தனர்.

வைரமுத்து: கேரளம் ஒன்றை மறந்து விட்டது. முல்லைப் பெரியாற்று தண்ணீரில் கேரள சகோதரனுக்கும் சேர்த்துத்தான் எங்கள் தமிழன் நெல் விளைவிக்கிறான். காய்கறி பயிரிடுகிறான். உடைந்த சோவியத் யூனியன் என் நினைவில் வந்து வந்து போகிறது. மூன்றாம் உலகப்போர் மூண்டால், அது தண்ணீருக்காகத்தான்  அந்தப் போர் எங்குமே நிகழக் கூடாது. குறிப்பாக, இந்தியாவில் தொடங்கிவிடக்கூடாது.

பச்சைத்தமிழ்நாடு பாலைவனமாக சம்மதிக்க மாட்டோம். போராடுவோம்.  முல்லைப் பெரியாற்றை விடமாட்டோம். தமிழர்கள் பட்ட சிங்கள காயமே இன்னும் ஆறவில்லை. அதற்குள் கேரளா வேறு எங்கள் இனத்தைக் கீறுவதா? விதியே விதியே என் செய நினைத்தாய் தமிழ் சாதியை? தமிழ் இனமே ஒன்றுபடு.

கேரளா ரயில் மறிப்பு: முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசை கண்டித்து தமிழர் வாழ்வுரிமைக்கான கூட்டமைப்பு, அம்பேத்கர் மக்கள் இயக்கம் ஆகியவற்றின் தொண்டர்கள்  ஏராளமானோர் சேலம் ஜங்சன் வழியாக கேரள செல்லும் பெங்களூர்  எர்ணாகுளம் இண்டர் சிட்டி எக்ஸ்பிரசை மறிக்க முயன்று கைதாகினர். 


சிந்திக்கவும்: ஒருவகையாக பாதிப்புகளை உணர்ந்து தமிழர்கள் ஒன்று பட ஆரம்பித்துள்ளார்கள். நமது மவுனத்தால் ஒன்றரை இலட்சம்  ஈழத்து உறவுகளை இழந்தோம். முல்லை பெரியாரிலும், கூடங்குளம் அணு மின்நிலையம் விசயங்களில் மவுனம் காத்தால் தமிழகமும், தமிழர்களும் பெரும் அழிவை சந்திப்பது உறுதி.12 கோடி மக்களுக்கு என்று ஒரு நாடு தேவை என்பதை உணர்வோம். உறுதியுடன் போராடுவோம்.

ரௌத்திரம் பழகு 
...ஈழப்பிரியா...

Nov 23, 2011

"டேம் 999 தரும் பாடம்" தமிழ்நாடு தமிழர்களுக்கே!

NOV 24: முல்லைப் பெரியாறு அணையை மையமாக வைத்து, அணை உடைவது போன்று தயாரிக்கப்பட்ட  படமே  "டேம் 999".

இந்த அணையை உடைத்து விட்டு வேறு தாழ்வான பகுதியில் அணையை கட்டி தமிழகத்துக்கு வரும் நீரை தடுப்பதே கேரளா அரசின் திட்டம்.

முல்லைப் பெரியாறு அணையிலிருந்து வரும் நீரால் தமிழகத்தில் 13 லட்சம் ஏக்கர் நிலத்துக்கு நீர்ப்பாசனம் கிடைக்கிறது.  இந்த அணையை எப்படியாவது உடைக்க வேண்டும் என்பதற்காக கேரள அரசு பல சூழ்சிகளை செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாகத்தான் இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது.

அணையை உடைக்க வேண்டிய தேவையில்லை என்றும் அந்த ஆணை பாதுகாப்பானதாகவே இருக்கிறது என்றும்  நிபுணர்கள் குழு அறிக்கைகள் தெரிவித்த பின்னரும் கேரளம் வேண்டும் என்றே இதில் பிடிவாதம் காட்டி வருகிறது. அணை உடைவதைப் போல் காண்பிக்கும் இந்த படத்தினை திரையிடக்கூடாது என்று தமிழகத்தில் பெரும் பதட்டம் நிலவுகிறது. 

இந்தப் படம் இந்தியாவில் வெள்ளிக்கிழமை வெளியிடத் திட்டமிடப் பட்டுள்ளது. 
இந்நிலையில் இப்படத்தை  தமிழகத்தில் திரையிட மாட்டோம் என தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. பல்வேறு கட்சிகள், அமைப்புகளின் எதிர்ப்பு காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

சிந்திக்கவும்: எங்கே போனார்கள் நம் போலி தேசபக்தி வடவர்கள். ஏன்யா! தமிழ் நாட்டு மின்சாரம் கேரளாவுக்கு வேண்டும், தமிழ் நாட்டு அரிசி, மீனு, காய்கறி வேண்டும் தண்ணி மட்டும் கொடுக்க மாட்டே! தமிழ்நாட்டில் எங்கு திரும்பினாலும் "கேரளத்து நாயரு டீக்கடை" நீ பிழைக்க தமிழன் வேண்டும் ஆனால் தண்ணி கொடுக்க மாட்டே.

கர்நாடகக்காரனுக்கு நம்ம மின்சாரம் வேண்டும், நம்ம உணவு பொருள் எல்லாம் வேண்டும் ஆனால் தண்ணி மட்டும் தரமாட்டான். வீணா தண்ணிய கடலுக்கு திறந்து விட்டாலும் விடுவானே தவிர தமிழனுக்கு தரமாட்டான். இந்தியாவுடன் இருப்பதால் தமிழகத்துக்கு எந்த நன்மையையும் இல்லை. நம்மை சுரண்டி பக்கத்து மாநிலத்துகாரனுக்கு கொடுப்பான் இந்த வடநாட்டு ஆட்சிகாரன்.

அதனாலேயே கேட்கிறோம் தமிழர்களுக்கு என்று "தனி நாடு" வேண்டும் என்று. தமிழகத்தில் எல்லா வளமும் இருக்கிறது. நம் மக்களுக்கு தேவையானதை நாமே நிறைவேற்றி கொள்ள முடியும். இதை எல்லாம் நாம் சொன்னால் இந்திய தேசபக்தி அடிமைகளுக்கு பொறுக்காது. இந்தியாவை விட்டு தமிழகம் பிறியும் காலம் வந்து விட்டது. அந்த காலம் வெகு தூரத்தில் இல்லை. தமிழா ஒன்று படு! தமிழ் நாடு தமிழர்களுக்கே என்று சொல்லு!!


ரௌத்திரம் பழகு 
...ஈழப்பிரியா...

Nov 13, 2011

மானம்கெட்ட கடல்படையும் அதன் கமாண்டரும்!

NOV 15: தமிழக மீனவர்கள் இந்திய கடல் எல்லையை தாண்டி மீன் பிடிக்க செல்லக்கூடாது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஜெகதாப்பட்டினத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு கூட்டத்தில் இந்திய கப்பல் படை கமாண்டர் பிஜ்ரானியா எச்சரிக்கை விடுத்தார்.


சிந்திக்கவும்:  இதை சொல்ல உங்களுக்கு வெக்கமா இல்ல. அன்றாடம் வாயிற்று பிழைப்பை தேடி உயிரை பணயம் வைத்து கடலில் மீன்பிடிக்க சொல்கிறார்கள் தமிழக மீனவர்கள். உங்களை மாதிரி பெரிய, பெரிய கப்பலில் எல்லாவிதமான பாதுக்கப்பு உபகரணங்களுடன்  ஊர்வலமா போகிறார்கள் எம்குல மீனவர்கள்.

சிறு சிறு படகுகளில், கட்டு மரங்களில், மீன்பிடிக்க பல்வேறு இன்னல்களுக்கும், இடையூறுகளுக்கும் மத்தியில்  மீன்பிடிக்க சொல்கிறார்கள் நமது மீனவர்கள். சூராவ்ளிகாற்று, மழை, சுனாமி, சிங்கள பயங்கரவாத படை இப்படி தினம்,  தினம் உயிரை கையில் பிடித்து கொண்டு தங்கள் ஒருஜான் வயிற்ரை நிறைக்க பாடுபடும் மீனவ பெருமக்களின்  துன்பத்தை  நினைத்தால் கண்கள் கலங்குகின்றன.

வெளிநாடுகளில் மீன்பிடி என்பது ஒரு சிறந்த வியாபாரம். அவர்களுக்கு என்று கடல்படை பாதுகாப்பு கப்பல்கள், ஹெலிஹோப்டேர்கள், மீன்பிடி படகுகளிலே வயர்லஸ் கருவி, பாதுகாப்பு உபகரணங்ககள் ஆகிய லைப் ஜாக்கெட், மிதவைகள், பிராணவாய்வு சிலிண்டெர்கள், சிறியரக ராடர்கள் என்று எல்லா வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும், ஏதாவது ஒரு பிரச்சனயில் மீன்பிடி படகுகள் மாட்டிகொண்டால் உடனே அவர்களை மீட்க்க "கோஸ்ட் கார்ட்" என்று அழைக்கப்படும் கடற்கரை பாதுகாப்பு கப்பல்களும், ஹெலிஹோப்டேர்களும் விரைந்து சொன்று அவர்களை பாதுகாக்கின்றன. அவர்களுக்கு என்று சிறந்த காப்பீடு திட்டம், மருத்துவம் என்று பட்டியல் நீள்கிறது.

இங்கே என்னவென்றால் உள்ளதும் போச்சே என்று சொல்லும் அளவுக்கு உள்ளது நிலைமை. நீ என்ன கடலில் எல்லை கோடா போட்டு வைத்திருக்கிறாய். அன்றாடம் பிழைப்புக்கு அல்லல் படும் மீனவர்களிடம் என்ன ரெடேர்களா இருகின்றன. அவர்கள் ஒரு குத்து மதிப்பாக வானிலை கணித்து காற்று போகும் திசையில் படகை செலுத்தி மீன்பிடிகிரார்கள். அவர்கள் வைத்திருக்கும் சிறிய ரக விசை படகுகளை வைத்து அவர்கள் கடலுடன் போராடும் உள்ளம் எல்லாம் பதறுகிறது.

தினம் தினம் கடலுக்கு மீன்பிடிக்க சென்றவர்கள் திரும்பி வந்தால்தான் நிஜம். அவர்கள் குடும்பத்தார் கடலை பார்த்தபடி கவலையோடு அமர்ந்திருப்பதும் வேதனையான விஷயம். கடலை கரையில் இருந்து பார்க்கும்போதே பயமாக இருக்கு. ஆர்பரிக்கும் கடலில் மீன்பிடிக்க சென்று கோர அலைகளோடு தினம் தினம் உயிர்போராட்டம் நடத்துகிறார்கள் மீனவர்கள். உங்களுக்கு என்ன ஊரான் வீட்டு வரிபணத்தில் சொகுசு பயணம் போகும் வெத்து வேட்டுகள்தானே. இந்த வீர முழக்கத்துக்கு மட்டும் குறைச்சல் இல்ல.

மீன்பிடிக்கும் மக்களின் வரிபணத்தில் சம்பளம் வாங்கும் மானம் கெட்டவர்களே இவர்களை பாதுகாப்பதை விட உங்களுக்கு வேறு என்ன வேலை. கடல் எல்லைகளில் உங்கள் கப்பலை நிறுத்தி வைத்து எல்லைத்தாண்டும் மீனவர்களுக்கு எச்சரிக்கை கொடுக்கலாமே திரும்பி போங்கள் நீங்கள் இந்திய எல்லையை தாண்டி போகிறீர்கள் என்று சொல்லலாமே.

இந்திய கடல் எல்லைகளில் சென்சார் பொருத்தப்பட்ட மிதவைகளை போடலாமே, அல்லது உன் சிங்கள முதலாளியின் காலை பிடித்து கெஞ்சலாமே தமிழக மக்களின் வரி பணமும் எங்கள் உடம்பில் ஓடும் ரேத்ததில் கலந்திருக்கிறது, நாங்கள் பவனிவரும் கப்பல்களில் கலந்துள்ளது அதனால் தயவுசெய்து தமிழர்கள் மேல் கைவைக்க வேண்டாம். அவர்கள் தப்பி தவறி இலங்கை கடல் எல்லையில் மீன்பிடிக்க வந்துவிட்டால் திரும்பி போகும்படி கப்பலில் உள்ள ஒலிபெருக்கிகள் மூலம் அறிவிப்பு கொடுங்கள் என்று சொல்லலாமே.

இப்படி எத்தனையோ வழிகள் இருக்க மீனவர்களை எச்சரிக்கிறார்கலாம் எச்சரிக்கை!. உங்கள் வீரத்தை இலங்கை கடல்படையிடம் காட்ட வேண்டியதுதானே. அதற்க்கு துப்பு இல்லை, துணிவும் இல்லை. ஏழை மீனவர்களிடம் தான் உங்கள் வீரம் எல்லாம். இதில்வேறு வல்லரசு புல்லரசு என்று கூப்படுவேறு. தமிழர்களின் மானம் காக்கவும், தமிழர்கள் அடிமைகள் இல்லை என்பதை உரக்க சொல்லி சுதந்திர காற்றை சுவாசிப்போம் வாருங்கள்.

ரௌத்திரம் பழகு
...ஈழப்பிரியா...