Sep 28, 2012

வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது!

Sep 29: காவிரி விவகாரத்தில் கர்நாடக அரசின் முடிவுக்கு ஆதரவாக, அக்.3ம் தேதி பெங்களூர் தமிழ்ச்சங்கம் அறப்போராட்டம் நடத்தவுள்ளது.

மேலும், அக்.6ம் தேதி கன்னட அமைப்புகள் அறிவித்திருக்கும் கர்நாடக முழு அடைப்பிற்கு, கர்நாடக வாழ் தமிழர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்குமாறு பெங்களூர் தமிழ்ச் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.

பாவம் பெங்களூர் தமிழர்கள், அவர்களுக்கு இதை விட்டால் வேறு வழியும் இல்லை. காவேரி விவகாரத்தில் அமைதிகாத்தால் கன்னட வெறியர்கள் மூலம் கலவரங்கள் வாயிலாக சொத்துக்களையும், உயிர்களையும் இழக்க நேரிடும்.

தமிழர்கள் என்கிற ஒரே காரணத்துக்கு நாம் எல்லா நிலைகளிலும் புறக்கணிக்கப்படுகிறோம். இப்படிப்பட்ட இந்தியா ராஜியத்தொடு நாம் சேர்ந்திருக்க வேண்டுமா? என்பதை ஒவ்வொரு தமிழனும் முடிவு செய்ய வேண்டிய தருணம் இது. காவேரி விவகாரத்தில் உச்ச நீதி மன்றத்தின் உத்தரவுகளையும், தீர்ப்புகளையும் ஆரம்பம் முதல் கர்நாடக அரசு தனது காலில் போட்டு மிதித்தே வந்துள்ளது.

அது இப்பொழுதும் தொடர்கிறது, கர்நாடகாவில் வாழும் தமிழர்கள் கனட வெறியர்களால் இதுவரை பட்ட துன்பங்கள் போதும். இப்படி போராட்டம் நத்துவதுதான் உங்களுக்கு பாதுகாப்பு என்றால்! அதையே நீங்கள் மேற்கொள்ளலாம். பெங்களூர் தமிழ் சங்கத்தையும், கர்நாடக தமிழர்களையும், தமிழக தமிழர்கள் யாரும் தவறாக எண்ண வேண்டாம். சொந்த இனத்தை வஞ்சித்து உயிர்வாழ வேண்டிய நிலையில்தான் வெளிமாநிலங்களில் வாழும் தமிழன் இருக்கிறான்.

மகாராஷ்ட்ராவில் அணு உலை வேண்டாம்! கூடங்குளத்தில் மட்டும் வேண்டு. தண்ணீர் தரமாட்டார்களாம்! நாம் மின்சாரம் மட்டும் கொடுக்க வேண்டுமாம்! என்ன ஒரு அநியாயம், எப்படியெல்லாம் நாம் வஞ்சிக்க படுகிறோம். இதை பற்றி பேசினால் நம் தேசபக்த வடவர்கள் இந்தியா 2020 ஒளிரப்போகிறது, இதுவெல்லாம் அந்நிய சதி என்பார்கள். ஆட்சியாளர்கள் மக்கள் போராட்டங்களை நசுக்க எடுத்த ஆயுதமே அந்நிய சதி.


ஈழப்படுகொலை பயங்கரவாதி ராஜபக்சேவுக்கு பிஜேபி தலைமையில் வடநாட்டில் வரவேற்ப்பு. காவேரி, முல்லை பெரியாறு, தமிழக மீனவர் படுகொலை, கூடங்குளம், ஈழத்து இனப்படுகொலை இப்படி தொடர்ந்து தமிழர்களுக்கு விரோதமாக  செயல்படும் ஒரு மத்திய ஆட்சியோடு நாம் ஒட்டி கிடக்க வேண்டுமா? அன்றே பெரியார் சொன்னார் இந்த வடகிந்திய வடவர்களோடு ஒட்டிகிடப்பதனால் நம் இனம் அழிவை நோக்கி போகும் என்றார். அது முற்றிலும் சரியாகவே இருக்கிறது.

வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது. ஒரே ராஜ்ஜியம்! பாரத் மாதாவுக்கே ஜே என்கிற BJPயின் வறட்டு வாதம் தமிழர்களுக்கு தண்ணீர் கொடுக்க வேண்டாம் என்பதுதானா? இப்பொழுது கர்நாடகாவை ஆள்வது யார்? தமிழர் போராளி இயக்கங்களும், தமிழ் ஆதரவாளர்களும் சொல்வது முற்றிலும் உண்மையே! ஒவ்வொரு தமிழனும் தனித்தமிழ் நாடு அவசியம் என்பதை சிந்திக்க வேண்டிய தருணம் இது. தமிழர்கள் சிந்திப்பார்களா? ஒன்றுபடுவார்களா?
ரௌத்திரம் பழகு
...ஈழப்பிரியா...

2 comments:

Anonymous said...

தமிழர்களின் உணர்வுகளை பதிந்ததற்கு நன்றி.

Anonymous said...

Nalla pathivu vaalthukkal