Sep 27, 2012

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு! அதிர்ச்சியில் தினமலர்!


Sep 28: பதிமூவாயிரம் ஆயிரம் கோடி அல்ல மக்களின் உயிர்தான் முக்கியம் சுப்ரிம்கோர்ட் அதிரடி உத்தரவு.  இச்செய்தியால் அதிர்ச்சி அடைந்துள்ளது தினமலர் நாளிதழ்.

சென்னை உயர்நீதி மன்றத்தில் கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன. 

ஆனால் அதை எதிர்த்து டெல்லி உச்ச நீதி மன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ள வழக்கில் கூடங்குளம் மக்கள் போராட்டத்திற்கு வெற்றி தரும் உத்தரவை உச்ச நீதி மன்றம் வழங்கி உள்ளது.

அணுஉலைக்கு எவ்வளவு பணம் முதலீடு செய்திருந்தாலும் மக்கள் பாதுகாப்பு முக்கியம். தேவைப்பட்டால் கூடங்குளம் அணுமின் நிலையத்தை நிறுத்தி வைப்போம்'  என்றும் உச்ச நீதி மன்றம் அதிரடியாக அறிவித்துள்ளது.  போபால் விசவாய்வு கசிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீங்கள் என்ன பரிகாரம் செய்திருக்கிறீர்கள் என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.
தமிழகத்தை உலுக்கும் ஒரு முக்கிய பிரச்சனையில் உச்ச நீதிமன்றத்தின் இவ்உத்தரவு எல்லா பத்திரிக்கையிலும் முக்கிய செய்தியாக வந்திருக்கும் நேரத்தில் தினமலரில் இது குறித்து வெளிவந்த செய்தியில் முழு சாராம்சமும் இடம்பெறவில்லை. இது போல் மக்கள் போராட்டங்களையும், தமிழர் போராட்டங்களையும், சிறுபான்மை மற்றும் தலித் மக்களின் போராட்டங்களை தினமலம் திட்ட மிட்டு மறைத்தே வந்துள்ளது

இந்திய வரலாறு கூடங்குளம் போன்று ஒரு நீண்ட நெடிய  மக்கள் போராட்டத்தை கண்டதில்லை. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு மக்கள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி. கூடங்குளம் மக்களுக்கு கிடைத்த இந்த வெற்றிக்கு சிந்திக்கவும் இணையத்தளம் சார்பாகவும், வாசகர்கள் சார்பாகவும்  நமது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்

தினமலர் நாளிதழை புறக்கணிப்போம்!
 *மலர்விழி*

7 comments:

Seeni said...

nalla pakirvu!

makizhchi!

PUTHIYATHENRAL said...

Thank u for ur comments MR. Seeni

திண்டுக்கல் தனபாலன் said...

மிக்க மகிழ்ச்சி...

தினமலர் வாங்குவதை நிறுத்தி பல வருடங்கள் ஆகி விட்டது...

தகவலுக்கு மிக்க நன்றி...

Easy (EZ) Editorial Calendar said...

மகிழ்ச்சியான செய்தி......மகிழ்ச்சியான செய்தி......உங்கள் பகிர்வுக்கு நன்றி.......

நன்றி,
பிரியா
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

PUTHIYATHENRAL said...

Thanks for visiting and comments mr. Danabalan.

PUTHIYATHENRAL said...

Nanri priya sister

நிலாமகள் said...

ஊட‌க‌த் துறையை க‌ள‌ங்க‌ப்ப‌டுத்தும் அடிவ‌ருடிக‌ள்!