Dec 31, 2012

பாலியல் வன்புணர்வை வைத்து அரசியல்!

Jan 01: பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு மரணம்  அடைந்த மாணவியை வைத்து நன்றாக அரசியல் நடத்துகிறார்கள் ஒட்டு பொருக்கி அரசியல் கட்சியினர்.

பயனற்ற அறிவிப்புக்கள்: 1) பலாத்காரத்துக்கு ஆளான டில்லி மாணவி உயிரிழந்ததை அடுத்து, புத்தாண்டு கொண்டாட்டத்தை ரத்து செய்வதாக ராணுவம் அறிவித்துள்ளது.

2) பலாத்காரத்துக்கு ஆளான டில்லி மாணவி உயிரிழந்ததை அடுத்து, குடியரசு தலைவரின் புத்தாண்டு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

3) பலாத்காரத்துக்கு ஆளான டில்லி மாணவி உயிரிழந்ததை  அடுத்து காங்கிரஸ் கட்சி சார்பில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் எதுவும் இல்லை  என்று சோனியா அறிவித்துள்ளார்.

* நீங்கள் புத்தாண்டு கொண்டாடினால் என்ன! கொண்டாடாமல் போனால் என்ன!  உருப்படியாக எதையாவது செய்வதை விட்டு நீலி கண்ணீர் வடிப்பதேன்*
*******************************
பயனுள்ள சில அறிவுப்புகள்: 1)  பஞ்சாப்பில், விசாரணை என்ற பெயரில் இனி பெண்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து விசாரணை நடத்தக் கூடாது என அம்மாநில முதல்வர், காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்

2). ஆபத்தில் சிக்கித் தவிக்கும் பெண்களுக்கான அவசர உதவி சேவை மையத்தை உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்யா தாக்கரே துவக்கியுள்ளார். மும்பை, புனே, நாசிக் போன்ற நகரங்களில் ஆண்டு முழுவதும் 24 மணி நேர சேவையாக இந்த மையம் செயல்படும்

3). பாலியல் வன்முறை வழக்குகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்த வழக்குகள் ஆகியவற்றை விசாரிக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் மகளிர் விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும். விரைவில் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கும் வகையில், தொடர்ச்சியாக தினசரி வழக்குகளை நடத்தி விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.
*******************************
சிந்திக்கவும்: இந்திய பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும். பாலியல் வன்புணர்வு செய்பவர்கள் வழக்கை ஒரு மாதத்துக்குள் விசாரித்து மரணதண்டனை வழங்க வேண்டும். அதற்காக சிறப்பு நீதிமன்றங்கள் உருவாக்கப்பட வேண்டும்.

இதில் சாதாரண குடிமகன் முதல் ராணுவம், போலீஸ், எம்.பி., எம்.எல்.ஏ. யாராக இருந்தாலும் நீதி ஒரே சமநிலையில் பேணப்பட வேண்டும். பாலியல் வன்புணர்வு வழக்குகளை விசாரிக்க தனியாக ஒரு துறை அமைக்கப்பட வேண்டும். அந்த துறை முற்றிலும் நேர்மையான அதிகாரிகளை கொண்டு நிரப்பப்பட வேண்டும். அந்த துறையின் நடவடிக்கைகளில் தலையிட அரசியவாதிகளுக்கோ, அதிகாரம் படைத்தவர்களுக்கோ உரிமை அளிக்கப்பட கூடாது.

இப்படி ஒரு துறையை அமைத்து பாலியல் வன்புணர்வில் ஈடுபடும் கயவர்களை ஒரு மாதத்திற்குள் மரணதண்டனை விதித்தால் இனி ஒரு கயவனும் பெண்களை இதுபோன்ற எண்ணத்தில் பார்க்க பயப்படுவான். ஈழத்திலே, காஷ்மீரிலே, சத்தீஸ்கரிலே பெண்களை கற்பழித்த இந்திய இராணுவத்தினர், காவல் நிலைய கற்பழிப்புகளை நடத்திய இந்திய காவல்துறையினர் இவர்களின் பெயர்களை பெட்டியலிட்டு இவர்கள் மீது சுமத்தப்பட்ட வழக்குகளை மீள் விசாரணை செய்து தண்டிக்கப்பட வேண்டும். அப்பொழுதுதான் நீதி முறையாக செயல்படுகிறது என்கிற நம்பிக்கை ஒவ்வொரு குடிமகனுக்கும் வரும்.
******************************* 
ரௌத்திரம் பழகு
*ஈழப்பிரியா*




 

 

No comments: