Jan 1, 2013

இந்தியாவின் தலை சிறந்த மனித உரிமை போராளி! உதயகுமார்!

Jan 02: NCHRO  (National Confederation of Human Rights Organisations) வழங்கும் இந்தியாவின் மிக சிறந்த மனித உரிமை போராளிகளுக்கான முகுந்தன் சி மேனன் நினைவு விருதை கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு மக்கள் போராட்டத்தின் தலைவர் டாக்டர் உதயகுமார் பெறுகிறார்.

யார் இந்த முகுந்தன் C மேனன்: இந்தியாவின் தலை சிறந்த மனித உரிமை போராளியான இவர் 1948 ஆம் ஆண்டு இவர் கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டம் செண்பகாசேரி என்கிற ஊரில் பிறந்தார். டெல்லியில் பத்திரிக்கையாளராக தனது வாழ்க்கையை தொடங்கிய இவர் இந்தியாவில் நடக்கும் மனித உரிமை மீறல்களை கண்டு மனம் வருந்தினார். அதற்க்கெதிராக தனது வாழ்க்கையின் 35 வருடங்களை செலவிட்டு பின்னர் இயற்க்கை எய்தினார்.
 
அவர் ஆற்றிய பணிகள்: இவர்  PUCL (People's Union for Civil Liberties), மற்றும் NCHRO (National Confederation of Human Rights Organisations), KCLC ( Kerala Civil Liberties),  போன்ற மனித உரிமைகள் இயக்கங்களில் முக்கிய தலைவராக இருந்து பணியாற்றினார். டெல்லியில் பத்திரிக்கையாளராக 1970 இல் செயல்பட்டார். இந்திய பத்திரிக்கைகளான தேசஜஸ் மற்றும் மில்லி ஹெஜட் போன்ற பத்திரிக்கைகளிலும் அல்ஜெசிரா போன்ற வெளிநாட்டு தொலைகாட்சியிலும் ஜெர்னலிஸ்ட் ஆக பணியாற்றினார்.
 
முகுந்தன் சி. மேனன் விருது: மறைந்த இவரது நினைவாகத்தான் ஒவ்வொரு வருடமும் இந்தியாவின் தலை சிறந்த மனித உரிமை போராளிகள், மனித உரிமை ஆர்வலர்கள் , சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், கலைஞர்கள், எழுத்தாளர்கள் என NCHRO அமைப்பு சார்பாக  ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்படுகிறது.

அதன்படி இந்த ஆண்டு  சிறந்த மனித உரிமை போராளிகான விருது கூடங்குளம் போராட்டத்தை வழி நடத்திவர்களில் ஒருவரான டாக்டர் எஸ்.பி.உதயகுமார் அவர்களுக்கு  வழங்கப்பட இருக்கிறது . ரூ 25000 ரொக்க பரிசுடன் விருதுதும் சான்றிதழ்களும் வழங்ப்பட உள்ளது.
 
இந்தியாவின் தலை சிறந்த மனித உரிமை போராளியாக விளங்கிய  முகுந்தன் C மேனன் அவர்களை ஆசிரியர்கள் குழு சார்பாக நினைவு கூர்வதில் பெருமிதம் கொள்கிறோம். அரசு பயங்கரவாதத்தால்  பாதிக்கப்பட்ட பல்வேறு தரப்பு மக்களுக்கு நீதி கிடைக்க  35 வருடகாலம் அயராது உழைத்தவர். மற்றைய மனித உரிமை ஆர்வலர்களுக்கும், நமக்கும் பெரும் முன்மாதிரியாக திகழ்ந்தவர்.
 
நட்புடன் ஆசிரியர்: புதியதென்றல்.

4 comments:

Anonymous said...

Poraattathirkku kitaiththa
vetri vaalththukkal.

Easy (EZ) Editorial Calendar said...

சரியான மனிதருக்கு தான் மிக சிறந்த விருது கிடைத்திருகிறது......வாழ்த்துக்கள்.....

நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் கண்ட மெய்ப்பொருள் said...

மனிதன் மனிதனாக வாழ்வதற்கு வழி காட்டுதல் மனித நேயத்தின் கடமையாகும்.மனிதனை மிருகங்களாகக் கருதி வதைக்கும் பழக்கம் நீண்ட காலமாக இருந்து வருகிறது .அதை எதிர்த்து போராடும் மக்கள் மிகவும் குறைவு.மனிதர்களுக்கு முறைதவறி செய்யும் கொடுமைகளுக்கு ,அரசியலாக இருந்தாலும்,ஆன்மீகமாக இருந்தாலும்,அதிகார வர்க்கமாக இருந்தாலும் எதிர்த்து போராடும் குணம் படைத்தவர்களை,இந்த சமுகம் பாராட்டியே ஆகவேண்டும் .அதுவே அறிவு படைத்த மனித பண்பாகும்.சிறந்த போராளி உதயகுமார் அவர்களுக்கு இந்த விருது கொடுப்பது பொருத்தமானதாகும் .நீண்டகாலம் வாழ்க உதயகுமார் .அன்பான வாழ்த்துக்கள்.;--அன்புடன் ஆண்மநேயன் ;--கதிர்வேலு.

அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் கண்ட மெய்ப்பொருள் said...

இந்தியாவின் தலை சிறந்த மனித உரிமை போராளி விருது !

மனிதன் மனிதனாக வாழ்வதற்கு வழி காட்டுதல் மனித நேயத்தின் கடமையாகும்.மனிதனை மிருகங்களாகக் கருதி வதைக்கும் பழக்கம் நீண்ட காலமாக இருந்து வருகிறது .அதை எதிர்த்து போராடும் மக்கள் மிகவும் குறைவு.மனிதர்களுக்கு முறைதவறி செய்யும் கொடுமைகளுக்கு ,அரசியலாக இருந்தாலும்,ஆன்மீகமாக இருந்தாலும்,அதிகார வர்க்கமாக இருந்தாலும் எதிர்த்து போராடும் குணம் படைத்தவர்களை,இந்த சமுகம் பாராட்டியே ஆகவேண்டும் .அதுவே அறிவு படைத்த மனித பண்பாகும்.சிறந்த போராளி உதயகுமார் அவர்களுக்கு,''இந்தியாவின் தலை சிறந்த மனித உரிமை போராளி'' என்ற இந்த விருது கொடுப்பது பொருத்தமானதாகும் .நீண்டகாலம் வாழ்க உதயகுமார் .அன்பான வாழ்த்துக்கள்.;--அன்புடன் ஆண்மநேயன் ;--கதிர்வேலு.