Jan 2, 2013

பள்ளிகளில் பெண்களுக்கு பாதுகாப்பு கலை! NWF!

Jan 03: இந்தியாவில் பெண்களுக்கு எதிராக நடக்கும் அனைத்து கொடுமைகளை தட்டி கேட்பதிலும், மனித உரிமைகள் மீறல்கள் மற்றும் பொது விசயங்களில் தங்களது பங்களிப்பையும் திறம்பட செய்து வருகிறது நேசனல் விமென்ஸ் ப்ரொண்ட் (National Women's Front).

இந்த இயக்கத்தின்  தேசிய கமிட்டி கூட்டம் கேரள மாநிலம் கோழிக் கோட்டில் நடந்தது. அதில் இந்திய சமூகத்தில் பெண்களுக்கு குறிப்பாக இளம் வயது பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடுபவர்களுக்கு எவ்வளவுதான் தண்டனைகள் கொடுத்தாலும் அது பெண்கள் அடைந்த கொடுமைகளுக்கு ஈடாகாது.

பாலியல் கொடுமைகளுக்கு ஆளாகின்ற பெண்கள் மனதளவிலும், உடலளவிலும் அதிகமாக பாதிக்கப்படுகின்றார்கள். பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடுகின்றவன் சாமானியனாக  இருந்தால் தண்டிகப்படுவதும் அதே நேரம் அவன் செல்வந்தனாக இருந்தால் தப்பித்து கொள்வதும் என்கிற நிலைதான் இந்தியாவில் நிலவி வருகிறது. இந்த நிலை முற்றிலும் மாறவேண்டும்.

பெண்களுக்கு எதிரான இதுபோன்ற கொடுமைகளில் ஈடுபடும் குற்றவாளிகளை இனம் கண்டு அவன் எப்படிப்பட்ட உயர் அந்தஸ்த்திலோ, பதவியிலோ இருந்தாலும் வெளியில் கொண்டு வரவேண்டும். இந்தியாவில் நடந்த பாலியல் பலாத்காரம் சம்பவங்களை கருத்தில் கொண்டு, அரசாங்கமே பெண்கள் தங்களை பாதுகாத்து கொள்ளும் பாதுகாப்பு கலைகளை பள்ளிகளில் கற்று கொடுக்க வேண்டும்.

பத்திரிக்கையாளரும் சமூக சேவகியுமான அருந்ததி ராய் மணிப்பூரில் பெண்கள் கற்பழிக்கப்பட்ட சம்பவங்களை வெளி கொண்டு வந்தார். ஆதிவாசி பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை அரசாங்கம் மீண்டும்  விசாரணைக்கு கொண்டு வர வேண்டும் என்றும் நேசனல் விமென்ஸ் ப்ரொண்ட் (National Women's Front) தேசிய கமிட்டி கேட்டுக்கொள்கிறது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

4 comments:

Anonymous said...

Tharkaappu kalaikaludan
samuga seerkettirkaana
ootrukkan edhu?enpathudan
avatrai agatraventiya kaalam.
Varaverpom*

Anonymous said...

"பள்ளிகளில் பெண்களுக்கு பாதுகாப்பு கலையை கத்து தரது இருக்கட்டும் பெண்ணென்றால் எப்படி இருக்க வேண்டும்.
பெண் நாகரிகத்தின் உச்சம்...
நாகரிகத்தின் உச்சத்தை எப்படி பாதுகாப்பது என்று....
பெண்கள் குட்டை பாவாடையும் டீசட்டும்
குறைத்து தன் அங்க அடையாளங்களை யாரிடம் காட்ட வேண்டுமோ அவர்களிடம் மட்டும் காட்டினால் போதும் என்று முதலில் சொல்லி கொடுங்கள்....
அன்று பிற நாட்டு பெண்கள் இந்திய கலாசாரம் பிடித்திருகிறது என்றார்கள்..இன்று....?????
ஓஹோ இவன் திரும்பவும் பெண் அடிமைக்கு வலி வகுக்கிறான் என்று பென்சமூகவாதிகள் நினைப்பார்கள்...
அவர்களுக்கு இந்த பழமொழியை நினைவுக்கு கொண்டு வருகிறேன்....
அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு.
இந்த பழ மொழி சாப்பாடுக்கு மட்டும் இல்லைங்கோ....

Anonymous said...

நேசனல் விமென்ஸ் பிராண்டில் இருப்பவர்கள் முஸ்லிம் பெண்கள் அதனால் நிச்சயம் குட்டை பாவாடை கிடையாது.

Anonymous said...

நேசனல் விமென்ஸ் பிராண்டில் இருப்பவர்கள் முஸ்லிம் பெண்கள் அதனால் நிச்சயம் குட்டை பாவாடை கிடையாது.