Jul 29, 2014

விடிந்திடும் முன் விழித்திரு!!

எப்போது மரணிப்போம்
யாருக்கு தெரியும்...?
எப்படியும் மரணிப்போம்
யாவருக்கும் தெரியும்..!

மரணத்தின் போது
வேதனைகளை பெறுவது சிரமம்.
மரணத்தை அடைய
வேண்டுவோர் கடினம்.!

காசாவில்.. குண்டு போட்டதில்
மாண்டவர்கள் அதிகம்.
குண்டென அறியாத -சின்ன
வண்டுகள் அழிவது அநியாயம்.

எது ஞாயம்..?
எது அநியாயம்?
என்பதை அறிந்தும்
எவருமே தட்டி கேட்க்காதிருப்பது ....!?

உயிருக்கு அச்சமா?
உடமைக்கு அச்சமா?
உலகவாழ்க்கை தான் ...
உனக்கு மிச்சமா!?

மனிதர்களை அழித்து...
மனங்களை எரித்து ...
மழலை பூக்களை பொசுக்கி
மண்ணோடு மன்னாக்குவது ...ஏன்?

நாடுகள் யாவும் இடுகாடாய் போனபின் ,
நரிகள் மட்டும் ஊளையிடத்தானோ?
மாடுகளும் ,மரங்களும் ,மனிதனை சார்ந்து
தாய் பால் குடிக்கா ஜென்மமா நீ?

அறிவியல் வளர்ந்து
அநாகரிகம் பெருகி .
ஆதிக்கம் செலுத்தும் -உன்
ஆத்மா யென்ன ..உருவமுள்ள பிசாசா?

வசிக்க வீடில்லை
சுவாசிக்க நச்சுக்காற்று .
நேசிக்க இறையிள்ளமு மில்லை .
இது எழுத பட்ட விதியா?

இறைவன் வெற்றிகூட்டத்திற்கு
எத்தி வைக்கும் நீதியா?
சடலங்கள் அடுக்க பட்டன ..
சவக்கிடங்குகள் எங்கே?

புதைக்க கூடிய உடல்களை
கழுகுகளும் -பிறாந்துகளும்
திங்க கூட கூச்ச படும் ...அப்படி
சிதைக்க பட்டிருக்கிறது உயிர்கள்.!

இயற்கை எய்தியவர்கள்
இயற்கையிலேயே மரணிக்கவில்லை .
சிறகுகள் விரிக்கும் முன்னே
சருகாய் உதிரங்கள் சரிந்தே கிடக்கிறது!

ஒருதாய் பெத்த மக்களே ..,
ஒன்று மட்டும் நிச்சையம் ....
ஒன்றுமே இல்லாமல் பிறந்தோம்
ஒன்றும் செய்யாமல் இறந்து விடாதீர்கள் !

எல்லோரும் அவரவர் கடவுளிடம்
முடிந்த அளவு பிராத்தனை செய்வீராக !
மடிந்து போவது மதமல்ல -நம்
மனிதம் தான்...கடவுளை தொழ...

குரல் கொடு தோழா..,'
இன்று நான்.
நாளை நீ...
நேற்று ...முடிந்தது ....
விடிந்திடும் முன் விழித்திரு
உலகம் உன் வசம்..
இல்லையே அது
மாறிடும் விஷம்.!

மு யாகூப் அலி.

1 comment:

Anonymous said...

கொடூரத்தில் தமஸ் பயங்கரவாதிகளை அழிக்கிறோம் என்ற பெயரில் பாலஸ்தீனிய மக்களைக் கொன்று குவிக்கும் இஸ்ரேலியர்களா அல்லது இராக்கில் ஷியாக்கள், சபக் குடியினர், கிறிஸ்துவர்கள் ஆகிய வர்களைக் கொல்லும் ம் சுன்னி ISIS முஸ்லிம்களா என்று பட்டி மன்றம் வைக்கலாம்.