JULY 16, விண்ணில் பாய்ந்து சென்றது பி.எஸ்.எல்.வி சி-17 ராக்கெட். முற்றிலும் இந்தியாவில் வடிவமைக்கப்பட்ட பி.எஸ்.எல்.வி.-சி17 ராக்கெட், ஸ்ரீஹரி கோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் 2-வது ஏவுதளத்தில் இருந்து இன்று மாலை 4.48 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது.
தொலைத்தொடர்பு செயற்கைக்கோளான ஜிசாட்-12 உடன் அந்த ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த செயற்கைக்கோளில் 12 டிரான்ஸ் பாண்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவை நாட்டின் தொலைத்தொடர்பு சேவைகளுக்கும், வானிலை கணிப்புகளுக்கும் பயன்படுத்தப்படும்.
இந்த ராக்கெட் ஏவுதலுக்கான 53 மணி நேர கவுண்ட் டவுன் நேற்று முன்தினம் காலை 11.48 மணிக்கு தொடங்கியது. பி.எஸ்.எல்.வி.-சி17 ராக்கெட் வெற்றிகரமாக பறக்க வேண்டி, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன (இஸ்ரோ) தலைவர் கே.ராதாகிருஷ்ணன் வழிபட்டார் என்பது குறிப்பிடத்தகக்து.
சிந்திக்கவும்: ராக்கெட்டை வருடக்கணக்கில் ஆய்வு செய்து கண்டு பிடித்தார்கள். அதில் ஆயிரக்கணக்கில் அதிநவீன சாதனங்களை பொருத்தினார்கள். இத்தனையும் செய்த இவர்கள் ராக்கெட் வெற்றிகரமாக பறக்க திருப்பதி ஏழுமலையான் இடம் போயி கேட்கிறார்கள். ஏழுமலையான் ராக்கெட்டை ஏவ உதவுவார் என்றால் அவரிடமே அதை செய்தும் கேட்க்க வேண்டியதுதானே! மூட நம்பிக்கைகளுக்கு ஒரு அளவே இல்லையா!
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
தொலைத்தொடர்பு சாதனையில்
மற்றுமொரு மைல்கல்
வணக்கம் மகேந்திரன் வாழ்த்துக்கள். கருத்து சொன்னதற்கு நன்றி. மீண்டும் வாருங்கள் உங்கள் கருத்துக்கள் உற்சாகம் அளிக்கின்றது.
Post a Comment