JULY 16, இந்தோனேஷியாவில் சுலவேசி தீவில் உள்ள மவுண்ட் லோகன் என்ற எரிமலை உள்ளது.
1580 மீட்டர் உயரமுள்ள அந்த எரிமலையில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பே புகை கிளம்பியது. எனவே அது வெடிக்கும் அபாயம் இருந்ததால் கடந்த மாதம் (ஜூன்) 9-ந் தேதியில் இருந்தே அப்பகுதியில் தங்கியிருந்த மக்கள் வெளியேற்றப் பட்டனர்.
இந்த நிலையில் நேற்று இரவு 10.31 மணியளவில் அந்த எரிமலை வெடித்து சிதறியது. இதனால் அதில் இருந்து பாறைகள், நெருப்பு குளம்புகள், மணல், புகை, சாம்பல் போன்றவை வெளியேறியது. அது சுமார் 500 மீட்டர் உயரத்தக்கு வானில் பரவியது.
முன் எச்சரிக்கை நடவடிக்கையாக இப்பகுதியில் வசித்த 28 ஆயிரம் பேர் ஏற்கனவே வெளியேற்றப்பட்டதால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.
கடந்த 1991-ம் ஆண்டு இந்த எரிமலை வெடித்ததில் சுவிட்சர்லாந்தை சேர்ந்த சுற்றுலா பயணி ஒருவர் உயிரிழந்தார். கடந்த அக்டோபர் மாதம் ஜாவா தீவில் உள்ள மெராபி என்ற எரிமலை வெடித்தது. அதில் சிக்கி 35 பேர் பலியாகினர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment