![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiOvdhIvOpjYu64r77bJbH_wAVag60wjuYd4BFwEyQ4jEicMldrtGTr9EOVMPwrV7vvkxEimwoz20V4KqX7kYzJQofDK56vcE2VN52JvB41qxYHLQtRBM2g1DsmxhyO0mjlGiPUUnKGMIQ/s320/sinthikkavum.jpg)
போரின் இறுதிக்கட்டத்தில் இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியமை தொடர்பான விபரங்களை சேகரித்த காரணத்தினாலேயே சிங்கள ஊடகவியலாளர் பிரகீத் கடத்தப்பட்டு காணாமல் போனதாக அவரது மனைவி பிபிசி ஊடகத்திற்கு தெரிவித்தார். அரசியல் பத்தி எழுத்தாளரும் காட்டூன் ஓவியராக விருந்த பிரகீத், இரசாயன ஆயுதங்கள் தொடர்பான தனது ஆய்வறிக்கை ஒன்றை ஊடகங்களில் வெளியிட்டு அதுபற்றி வெளிநாட்டு இராச தந்திரிகளுக்கும் தெரியப்படுத்தியதை தொடர்ந்தே காணாமல் போனார் எனவும் பிரகீத்தின் மனைவி சந்தியா தெரிவிக்கின்றார். பிரகீத் காணாமல் போனதற்கு முன்னர் 2009 ஓகஸ்ட் மாதத்திலும் வெள்ளை வானில் வந்தவர்களால் கடத்தப்பட்டு பின்னர் விடுவிக்கப் பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. ஜனவரி மாதம் 24 ஆம் திகதி 2010 அன்று காணாமல்போன பிரகீத் பற்றிய எந்தவித தகவலும் இதுவரை வெளியாகவில்லை. காலியில் நடைபெற்று கொண்டிருக்கும் இலக்கிய விழாவுக்கு தனது மூத்த மகனுடன் சென்ற சந்தியா, அங்கு வருகைதந்திருந்த சர்வதேச எழுத்தாளர்களிடமும் நூல் ஆசிரியர்களிடமும் தனது கணவனின் விடுதலைக்கு உதவுமாறு கேட்டுக்கொண்டார். கடைசிகட்ட போரில் பெரும் அளவில் ரசாயன ஆயூதங்கள் பயன்படுத்தப் பட்டுள்ளது என்பது குறித்து பல திடுக்கிடும் தகவல்கள் ஒவ்வொரு நாளும் வெளியாகிய வண்ணம் உள்ளது என்பது குறிப்பிட தக்கது.
No comments:
Post a Comment