புது தில்லி, ஜூலை 24: இந்தியாவை ஒருங்கிணைப்பவர் கடவுள் ராமர் என்று பாஜக மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி கூறினார்.தில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற ராமஜென்ம பூமி' தொடர்பான கருத்தரங்கில் அவர் மேலும் பேசியதாவது: இந்தியாவின் சித்தாந்தத்துக்கு எதிராகத்தான் நம் நாட்டின் மீது தீவிரவாத தாக்குதல்கள் தொடுக்கப்படுகின்றன. ராம சித்தாந்தம் தேச பக்தியையும், சமூக ஒற்றுமையையும் வெளிப்படுத்துகிறது.
தீய சக்திகளுக்கு எதிராக ராமர் போரிட்டார். அதேபோல், தீவிரவாதத்துக்கு எதிராக நாம் போரிட வேண்டும். நாட்டின் பெருமை, சுயமரியாதை ஆகியவற்றை வலியுறுத்தும் ராம சித்தாந்தம், சமுதாயத்தின் அனைத்து தரப்பு மக்களையும் ஒருங்கிணைக்கிறது. அந்த சித்தாந்தத்தை காப்பாற்ற வேண்டியது நமது கடமை. இந்தியாவை வல்லரசாக உருவாக்க ராணுவ, பொருளாதார பலம் மட்டும் போதாது. நமது நாட்டின் தேசிய அடையாளம், கலாசாரம் குறித்த விழிப்புணர்வும் வேண்டும் என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment