
பதவியை ராஜிநாமா செய்துள்ள அமீத் ஷா இப்போது எங்கு இருக்கிறார் என்பது குறித்த விவரங்கள் தெரியவில்லை. அவரை கைது செய்வதற்காக 6 தனிப்படைகளை அமைத்து சிபிஐ தேடி வருகிறது.குஜராத்தில் முதல்வர் மோடிக்கு அடுத்த தலைவராகவும், அவருக்கு நெருக்கமாகவும் இருந்த அமைச்சர் அமீத் ஷாவுக்கு சோராபுதீன் ஷேக் போலி என்கவுன்ட்டர் வழக்கு மூலம் சோதனை ஏற்பட்டது. அமைச்சரின் தூண்டுதலின் பேரில்தான் சோராபுதீன் போலீஸôரால் சுட்டுக் கொல்லப்பட்டார் என்பது முக்கிய குற்றச்சாட்டு.
இது தொடர்பாக சிபிஐ இருமுறை சம்மன் அனுப்பியும், அமீத் ஷா ஆஜராகவில்லை. மாறாக முன்ஜாமீன் கேட்டு சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால் அது தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் அமைச்சர் உள்பட 15 பேர் மீது நீதிமன்றத்தில் சிபிஐ வெள்ளிக்கிழமை குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. இதில் கொலை,ஆள் கடத்தல், மிரட்டல், குற்றச்சதி உள்ளிட்ட பிரிவுகளில் அமீத் ஷா மீது வழக்குத் தொடரப்பட்டது.இந்நிலையில் தனது அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்வதாக நரேந்திர மோடிக்குக் கடிதம் அனுப்பினார்.
No comments:
Post a Comment