Jan 3, 2010

சோமாலியா கடற்கொள்ளையர்கள் இங்கிலாந்து நாட்டின் கப்பலை கடத்தினர்


சோமாலியா கடற்கொள்ளையர்கள் தங்கள் பகுதிக்கு வரும் கப்பல்களை கடத்தி பணம் பறித்து வருகின்றனர். இவர்களின் அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு இங்கிலாந்தின் ரசாயன பொருட்கள் ஏற்றி வந்த செயின்ட் ஜேம்ஸ்பார்க் என்ற கப்பலை சோமாலியா கடற்கொள்ளையர்கள் கடத்தி சென்றனர்.

இந்த நிலையில் இங்கிலாந்தின் மேலும் ஒரு சரக்கு கப்பலை கடத்தினர். இக்கப்பல் சிங்கப்பூரில் இருந்து சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்பா நகருக்கு கார்களை ஏற்றி சென்றது.

அதில் 25 ஊழியர்கள் இருந்தனர். இவர்கள் அனைவரும் பல்கேரியா நாட்டை சேர்ந்தவர்கள். இக்கப்பல் 13 ஆயிரம் டன் எடை கொண்டது. சோமாலியா நாட்டு கடல் எல்லையில் இக்கப்பல் கடத்தப்பட்டுள்ளது.

கடத்தப்பட்ட இக்கப்பலை மீட்க கொள்ளையர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இந்த தகவலை பல்கேரியாவின் வெளியுறவுதுறை மந்திரி தெரிவித்துள்ளார்.

No comments: