Jan 3, 2010

90 சதவீத புகார்களுக்கு டெல்லி போலீஸ் எஃப்.ஐ.ஆர் பதிவுச்செய்வதில்லை


புதுடெல்லி: சமீபத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் புகார்களுக்கு எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படவேண்டும் என்று உத்தரவிட்டதைத் தொடர்ந்து டைம்ஸ் ஆஃப் இந்தியா என்ற நாளிதழ் நடத்திய ஆய்வில் டெல்லி போலீஸார் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் புகார்களில் 90 சதவீதத்திற்கும் முதல் தகவல் அறிக்கை(எஃப்.ஐ.ஆர்) பதிவுச்செய்வதில்லை என்று தெரியவந்துள்ளது.

டெல்லி போலீஸின் பி.சி.ஆர் கால் என்ற டெலிபோன் வழியாக பொதுமக்கள் போலீசிற்கு அளிக்கும் இலவச தொலைபேசி எண், இதனை பரிசோதித்ததின் அடிப்படையில்தான் மேற்கண்ட ஆய்வின் முடிவு வெளியிடப்பட்டது. தினசரி 20 புகார் அழைப்புகள் வருகின்றன இதில் 10 அழைப்புகளும் வழிபறி சம்பந்தமான புகார்களாகும். பாதிக்கப்பட்டவர்கள் நேரிடையாக இந்த அழைப்புகளை விடுத்த போதும் போலீஸ் இதில் 10 சதவீத அழைப்புகளுக்கே எஃப்.ஐ.ஆர் பதிவுச்செய்கிறது.

கடந்த ஆண்டு 13500 புகார் அழைப்புகள் வந்தபொழுது போலீஸ் பதிவுச்செய்தது வெறும் 1300 அழைப்புகளுக்கு மட்டுமே. 3000 வழிப்பறி தொடர்பான புகார் அழைப்புகள் வந்தபொழுது போலீஸ் பதிவுச்செய்தது வெறும் 450 எஃப்.ஐ.ஆர்கள்.பல புகார்களிலும் வழக்கு பதிவுச் செய்யாமலிருக்க காவல்துறையினரே புகார் அளிப்போரை சமாதானப்படுத்துவதாகவும் இவ்வாய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2009 ஆம் ஆண்டு அக்டோபரில் 975 புகார்கள் அளிக்கப்பட்டபோது 87 எஃப்.ஐ.ஆர் கள் மட்டுமே பதிவுச்செய்யப்பட்டன. நவம்பர் மாதம் 921 புகார்கள் அளிக்கப்பட்டபோது 81 வழக்குகளே பதிவுச்செய்யப்பட்டன. டிசம்பர் 15 ஆம் தேதி வரை 412 புகார்களில் எஃப்.ஐ.ஆர் பதிவுச்செய்தது வெறும் 49 மட்டுமே என்று இவ்வாய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தி:நன்றி தேஜஸ் மலையாள நாளிதழ்

No comments: