Oct 9, 2015

இந்திய சமூகத்துக்கு இந்துத்துவத்தால் ஆபத்து!

அக் 10/2015: இந்திய சமூகத்துக்கு இந்துத்துவத்தால் ஏற்பட்டிருக்கும் ஆபத்து, சிறந்த எழுத்தாளரும் சிந்தனையாளர்களும் ஆன நரேந்திர தபோல்கர், கல்புர்கி, கோவிந்த் பன்சாரே ஆகியோர்களை  கொலை செய்த இந்துத்துவா சக்திகளுக்கு எதிரான நீதி மறுப்பு,  உத்திரபிரதேசம் தாத்ரியில் பசு மாட்டிறைச்சி உண்டார் என்று குற்றம் சுமத்தி முஸ்லிம் முதியவர் ஒருவரை அடித்துக் கொன்றது, இந்த பிரச்சினைகளில் மோடி சாதிக்கும் கள்ள மவுனம், மோடியின் அமைச்சர்கள் தவணை முறையில் கக்கி வரும் மதவாத பேச்சிகள் இவற்றை கண்டித்து பல பிரபலமான எழுத்தாளர்கள் தங்கள் பெற்ற இந்திய அரசின் உயர் விருதான சாகித்திய அகாடமி விருதை திரும்ப கொடுத்து வருகிறார்கள். 

1). ந்தோ-ஆங்கில எழுத்தாளரும், சாகித்திய அகாடமி விருது பெற்றவருமான நயன்தாரா சகல் தனக்கு வழங்கப்பட்ட சாகித்திய அகாடமி விருதை திரும்ப கொடுத்துள்ளார். Rich Like Us’ என்ற ஆங்கில நாவலுக்காக 1986-ம் ஆண்டு சாகித்திய அகாடமி விருதை இவர் பெற்றார். இப்பொழுது இவரது வயது 88.

2). இந்தி கவிஞர் அசோக் வாஜ்பாயி அவர்களும் தனக்கு வழங்கப்பட்ட சாகித்திய அகாடமி விருதை திரும்ப அளித்துள்ளார். லட்சக்கணக்கானோர் மத்தியில் உரையாற்ற முடிகின்ற பிரதமரால் எழுத்தாளர்கள் கொல்லப்படும் போதும், அப்பாவி மக்களின் உயிர் பறிக்கப்படும் போதும், அமைச்சர்கள் தகாத வார்த்தைகளை வெளியிடும் போதும் ஏன் அவற்றை கண்டித்து பேச முடியவில்லை என்று கேள்வி எழுப்பி உள்ளார். 

3). கன்னட மொழியின் சிந்தனையாளர் கல்புர்கி கொலை செய்யப்பட்ட போது சாகித்திய அகாடமி விருதை முதன்முதலில் திரும்ப கொடுத்தவர் இந்தி எழுத்தாளர் உதய் பிரகாஷ். இவர் தனக்கு வழங்கப்பட்டிருந்த பொன்னாடை, பதக்கம், ஒரு லட்ச ரூபாய் என அனைத்தையும் சாகித்திய அகாடமிக்கு நேரில் சென்று கொடுத்து விட்டு வந்தார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. 

4). உதய் பிரகாஷ். கல்புர்கி கொலை குற்றவாளிகளை பிடிக்க காலதாமதம் ஆவதை கண்டித்து ஆறு இளம் கன்னட எழுத்தாளர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட ‘பெங்களூரு மாநகர போக்குவரத்துக் கழக ஆறழு சாகித்திய அகாடமி’ விருதை திரும்ப அளித்தனர். வீரண்ண மடிவளர், சதீஷ் ஜாவரே கவுடா, சங்கமேஷ் மீனாசனகை, ஹனுமந்த் ஹலிகெரி, ஸ்ரீதேவி ஆளூர் மற்றும் சிதானந்த் சாலி ஆகியோர் அக்டோபர் 3-ம் தேதியன்று கன்னட சாகித்திய பரிசத்துக்கு சென்று தங்கள் விருதுகளை திரும்பக் கொடுத்தனர்.

5). கன்னட மொழியின் மூத்த எழுத்தாளர்களில் ஒருவரான சந்திரசேகர் பட்டீல் தனக்கு வழங்கப்பட்ட மாநில அரசின் பம்பா விருதை இதே காரணத்துக்காக திரும்ப கொடுத்தார். கல்புர்கி மற்றும் முகமது அக்லாக்கின் ஓலம் இந்திய அளவில் எழுத்தாளர்களின் மனசாட்சியை உலுக்கி இருக்கிறது என்றார். 

முக்கிய குறிப்பு: ஆனால் தமிழ் எழுத்தாளர்கள், அசோகமித்திரன், கி. ராஜநாராயணன், வைரமுத்து, நாஞ்சில் நாடன், சு. வெங்கடேசன், திலகவதி, ஜோ.டி. க்ரூஸ், பிரபஞ்சன், பொன்னீலன் ஆகியோர் ஈழத்தமிழர் படுகொலை முதல் இதுபோன்று நாட்டின் மனச்சாட்சியையே உலுக்கும் செயல்கள் வரை இவர்களின் மவுனம் இவர்களின்  மனசாட்சி அற்ற தன்மையினையும், இவர்களின் விருது மோகத்தையும் காட்டுகிறது.  

No comments: