Oct 9, 2015

மாட்டுக்காக மனிதனை கொன்றவர்கள்!

மாட்டிறைச்சி வீட்டில் வைத்திருந்தார் என்று சொல்லி உத்தரபிரதேச மாநிலம் தாத்ரியில் 55 வயது முகமது இக்லாக் என்ற முதியவர் 200 பேர் கொண்ட ஆர்.எஸ்.எஸ். மற்றும் ஹிந்துத்துவா கும்பலால் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இந்திய ராணுவத்தில் பணிபுரியும் அவரது மகனும் கடுமையாக தாக்கப்பட்டு மருத்துவமனையில் உயிருக்கு போராடுகிறார். அவர் குடும்பத்து பெண்களும் தாக்கப்பட்டு உள்ளனர்.

இச்சம்பவத்திற்கு, பல அரசியல் கட்சிகள், தலைவர்கள், பல்வேறு சமூக அமைப்புகள் எழுத்தாளர்கள், பொதுமக்கள், பத்திரிக்கைகள், தொலைகாட்சிகள் என்று பல்வேறு தரப்பில் இந்தியா முழுவதும் கடும் கண்டன குரல்கள் கடந்த சில வாரங்களாக ஒலித்தது  வருகின்றன. 

இந்த விவகாரம் குறித்து இந்திய பிரதமர் மோடி இதுவரை மவுனமாகவே இருந்தார். ஹிந்துத்துவா மோடியின் மவுனம் குறித்து கடும் கண்டனங்கள் எழுந்தன. இந்தியாவை செத்த பிணம் ஆளுகிறது, இந்திய பிரதமர் சந்திர மண்டலம் சென்றிருக்கிறார் போன்ற கடும் கண்டன கணைகளுக்கு மோடி உள்ளானார். இருந்தும் தொடர் மவுனம் காத்து வந்தார். இந்நிலையில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவும், இந்திய ஜனாதிபதியும் கண்டனம் எழுப்பியதும் வாய் திறந்திருக்கிறார். 

குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் “முஸ்லிம்களை எதிர்த்து போரிட வேண்டுமா? அல்லது வறுமையை எதிர்த்து போரிட வேண்டுமா? என்று, இந்துக்களிடம் கேள்வி எழுப்பியுள்ளார். எத்துணை கொடிய பிணம் தின்னி கழுகை நாம் ஆட்சியில் அமர்த்தி இருக்கிறோம் என்பதனை மக்கள் யோசிக்க வேண்டும். தனது கட்சியின் எம் பி. சாக்க்ஷி மகராஜ் பசுக்களை காப்பதற்காக கொலை கூட செய்வேன் என்று சொல்கிறார். இக்லாக் வீட்டு பெண்கள் கற்பழிக்க படவில்லையே என்று சந்தோசப்படுங்கள் என்று  பாரதிய ஜனதா பெண் சாமியார் கூறுகிறார். இவர்கள் மேல் நடவடிக்கை எடுக்காமல் கள்ள மவுனம் சாதிக்கிறார் இந்திய பிரதமர் நரபலி நரேந்திர மோடி. இவர் ஆட்சி கட்டில் ஏறியது முதல் நாடே கலவர பூமியாகி போனது என்பதே உண்மை.  

No comments: