புனே பிலிம் இன்ஸ்டிடியூட் தலைவராக RSS இயக்கத்தின் அனுதாபி கஜேந்திர சவுகான் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரை தேர்வு செய்ததற்கு எதிராக மாணவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்களின் பிரதிநிதிகளை அழைத்துக் கொண்டு காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல் காந்தி ஜனாதிபதியை சந்தித்து, இந்த பிரச்சனை பற்றி முறையிட்டுள்ளார் .
அதன்பின் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் ராகுல் காந்தி, பா.ஜ.கவுக்கு சால்ரா அடிப்பவர்களுக்கே மட்டுமே உயர் பதவிகள் அளிக்கப்படுகிறது. முக்கிய பொறுப்புகளில் அமர்த்தப்படுபவர்கள் அதற்கான தகுதியுடன் இருப்பது இல்லை. மேலும் கல்வி நிறுவனங்களை ஆர்.எஸ்.எஸ். கைப்பற்றி வருகிறது. கல்வி நிறுவனங்கள் அரசியல் மயமாக்கப்படுகிறது. இது மாணவர்கள் நலனுக்கு எதிரானது" என அவர் தெரிவித்தார்.
சிந்திக்கவும்: மோடி தலைமையில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி கட்டில் ஏறியதும் RSS ஹிந்துதுவாவின் மறைமுக செயல்திட்டம் எல்லாம் நிறைவேற்றப்படுகின்றன. நீதி துறை முதல் ராணுவம் வரை ஏற்கனவே ஹிந்துவாவினர் ஊடுருவி விட்டனர். இன்னும் மீதம் இருக்கும் துறைகளையும், காலியிடங்களையும் ஹிந்துத்துவா சித்தாந்தங்களை கொண்டு நிரப்புவதே மோடியின் டார்கெட்.
1 comment:
பகிர்வுக்கு நன்றி..
Post a Comment