ஆகஸ்ட் 15: பிரிட்டீஷ் ஏகாதிபத்தியத்திய அடிமைத்தனத்திலிருந்து விடுபட்டு, இன்று 69 வது சுதந்திர தினத்தில் நமது நாடு அடியெடுத்து வைக்கிறது. இத்தினத்தை தமிழர்கள் சுதந்திர தினமாக கொண்டாடலாமா?
இந்நாளில் நாட்டு மக்கள் அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்களை ஒருவருக்கு ஒருவர் தெரிவித்துக் கொள்கின்றனர். நாடு வெள்ளையர்களிடம் இருந்து சுதந்திரம் அடைந்து கொள்ளையர்களிடம் சிக்கிக்கொண்டது. அத்தோடு மாநில சுயாட்சி என்கிற சித்தாந்தம் செத்துப்போனது.
ஹிந்திமொழி திணிப்பு தொடங்கி தமிழ்நாட்டை, தமிழ் இனத்தை அழித்து ஒழிக்க இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் ஒதுக்கி தள்ளிய தூத்துக்குடி ஸ்டர்லைட் தாமிர உருக்கு ஆலை. கூடங்குளம் அணுமின்நிலையம், மீத்தேன் எரிவாய்வு திட்டம், தாரங்கதார கெமிக்கல்ஸ், நியூட்ரினோ ஆய்வுமையம், பெப்சி, கோக்க கோலா, வரை பல்வேறு அழிவு தொழில் சாலைகளை தமிழ்நாட்டில் கொண்டுவந்து தமிழ் இனத்தையே பூண்டோடு அழிக்க திட்டமிடும் வடஇந்திய ஹிந்தி இந்தியாவிடம் தமிழினம் அடிமைப்பட்டு போனதே ஆகஸ்ட் 15 ஆகும்.
இலங்கையில் நமது தொப்புள்கொடி உறவுகள் கொல்லப்படும்பொழுது அதை தடுத்து நிறுத்த கோரி ஆறரை கோடி மக்கள்தொகையை கொண்ட தமிழினம் கொதித்து எழுந்து பலபோராட்டங்களை நடத்தியும் அதை மிதிக்காமல் அதேநேரம் சிங்கள பேரினவாத பயங்கரவாதிகளுக்கு ஆயுதங்களை கொடுத்து ஈழத்தமிழர்களை கொன்றொழிக்க உதவியதும், தமிழக மீனவர்களை காக்கை குருவிகள் என்று எண்ணி சிங்களராணுவம் சுட்டுகொன்று கொண்டிருக்கிறது அதைப்பற்றி எந்த கவலையும் கொள்ளாத இந்தியாவிற்கு ஆகஸ்ட் 15 சுதந்திரதினம்; ஆனால் தமிழர்களுக்கு ஆகஸ்ட் 15 என்பது அடிமைப்பட்ட தினம்.
இந்தியா என்கிற பாசிச வெறிபிடித்த நரியிடம் இருந்து என்று தமிழர்களுக்கு சுதந்திரம் கிடைக்கிறதோ அன்றே தமிழர்களின் உண்மையான சுதந்திர தினம். இதையே தமிழர்கள் கொண்டாடுவார்கள், கொண்டாடவேண்டும் என்பதை தமிழர்கள் உணர்ந்துகொள்ள வேண்டும். அதுவரை இந்திய சுதந்திர தினம் என்பது தமிழர்களின் அவமான சின்னமே.
*யாழினி*
2 comments:
foolish thought tamilnadu is a part of india
சிறந்த பதிவு
புதிய வலைப்பூவில் இணைய வாருங்கள்
இவ்வலைப்பூவில் நான் இதுவரை பேணிவந்த ஆறு வலைப்பூக்களை ஒன்றாக்கிப் பேணுகின்றேன்.
http://www.ypvnpubs.com/
Post a Comment