Dec 9, 2014

இவர்களின் கனவு எதில் முடியும்!

கவத் கீதையை தேசியப் புனித நூலாக விரைவில் அறிவிப்போமென இந்திய வெளிவிவகாரத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார். 
விசுவ ஹிந்து பரிஷத் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சுஷ்மா, பகவத் கீதை பகவானால் அருளப்பட்டு 5,151 வருடம் ஆகிவிட்டது. பகவத் கீதை ஏற்கனவே மோடி அரசால் கவுரவிக்கப்பட்டு வருவதாகவும் தேசிய நூல் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்கபடுவது மட்டும் தான் பாக்கி என்றும் கூறினார்.
அதற்கு உதாரணமாக அமெரிக்கா சென்ற மோடி ஒபாமாவை சந்தித்த போதும், ஜப்பான் சென்றபோது மன்னர் அகிஹிடோவை சந்தித்தபோதும் பகவத் கீதையை பரிசளித்ததை குறிப்பிட்டார். அலெக்ஸ் ஹேலியின் “ரூட்ஸ்” நூலை படித்திருக்கும் அமெரிக்க மக்கள் கீதையின் உண்மையான பொருளை அறிய வரும் போது காறித்துப்புவார்கள் என்பது வேறு விடயம்.
இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ். சங்கபரிவார்கள் ‘இது இந்துக்களின் புண்ணிய பூமி. எனவே ராமனை தேசிய நாயகனாக கொள், விநாயகன் ஊர்வலத்துக்கு முஸ்லிம்கள் வாழும் தெருக்களை திறந்து விடு, கிருஷ்ணன் அருளிய கீதையை தேசியப் புனித நூலாக அறிவி’ என்று எகத்தாளம் போடுகிறார்கள்.
சுஷ்மாவின் கோரிக்கையை ‘மதச்சார்பற்ற’ தேர்தல் அரசியல் கட்சிகள் ஒருங்கே கண்டித்திருக்கின்றன.  பலசமய வழிபாட்டுமுறை கொண்ட இந்தியாவில் கீதையை மட்டும் தேசியப் புனித நூலாக அறிவிப்பது மற்ற சமயத்தவரை புண்படுத்தும் என்பது பிரச்சினையின் ஒரு பகுதி தான். பிரச்சனை பாபர் மசூதி தொடங்கி, காசி, மதுரா போன்ற முஸ்லிம்களின் 4000 பள்ளிவாசல் இந்து கோவில்களாக இருந்தது அதை இடிக்க வேண்டும் என்பதில் தொடங்கி இப்பொழுது  தேஜோ மகாலியா எனப்படும் சிவன் கோயில் இருந்த நிலத்தின் ஒரு பகுதியில் தான் தாஜ் மஹால் கட்டப்பட்டுள்ளது என்பது வரை வந்துள்ளது.
இத்தோடு முடிந்து விடவில்லை இவர்களது கோரிக்கை முஸ்லிம்கள் தங்கள் தாய் மதத்துக்கு திரும்ப வேண்டும் என்பது வரை நீண்டுள்ளது. மேலும், இந்தியா என்கிற எல்லையோடு அவர்கள் கனவு நிறைவு பெறவில்லை அகண்ட பாரதம் என்கிற பெயரில் ஆப்கானிஸ்தான், சவூதி அரேபியா வரை பரந்துள்ளது. ஹிந்துதுவாவின் கனவு என்பது மிகபெரிய இரத்தம் சிந்தலில், உள்நாட்டு யுத்தத்தில் போயி முடியப்போகிறது என்பது என்னவோ நிதர்சனமான உண்மை. 

No comments: