Dec 27, 2014

நல்லாட்சி நாயகனா வாஜ்பேயி!?

 வாஜ்பேயிக்கு நல்லாட்சி நாயகன் பட்டம் மற்றும் பாரத ரத்னா விருது ஏன்.

வாஜ்பேய் அடிப்படை இந்துத்துவாவாதி என்று உறுதிபடுத்துவதற்கு அவர்களின் அதிகாரப் பூர்வ ஏடான ஆர்கனைசரில் (7.5.1995) அவர் எழுதிய கட்டுரை ஒன்றே சரியான - கெட்டியான சாட்சியமாகும்.

ஆர்.எஸ்.எஸ். என் ஆன்மா என்பது அக்கட்டுரையின் தலைப்பாகும்.

முஸ்லீம்களை வழிக்குக் கொண்டுவர மூன்று வழிகளை அதில் கூறுகின்றார். 

1) இந்துக்களை அணி திரட்ட வேண்டும் (Organising)

2) முஸ்லீம்களை உட்கொள்ளுவது (Assimilation) இதன் பொருள்: முஸ்லிம்களுக்கென்று உள்ள அடை யாளத்தை அழித்து அவர்களை இந்துமயமாக்குதல்.

3) முஸ்லிம்களை உட்கொள்ளுவது என்றால் - அதனைச் செயல்படுத்த மூன்று வழிகளை அக்கட்டுரை யில் குறிப்பிட்டுள்ளார்.

1) முஸ்லிம்கள் நம் வழிக்கு வராவிட்டால் இந்நாட்டு குடி மக்கள் என்ற நிலையிலிருந்து ஒதுக்கிவிட வேண்டும். அதாவது விரட்டி விட வேண்டும்.

2) முஸ்லிம்களை நமது வழிக்கு கொண்டு வர சலுகைகள், இலஞ்சங்கள் தருதல் - இது காங்கிரஸின் அணுகுமுறை.

3) முஸ்லிம்களை நமக்கு ஏற்றவாறு மாற்றி நம்முள் உட்கொள்ளுதல். இம்மூன்று வழிகளில் மூன்றாவதுதான் நம் வழி என்று எழுதியுள்ளார் வாஜ்பேயி.

இது எவ்வளவு பெரிய ஆணவமும், அச்சுறுத்தலும் - அடக்கு முறையும் மதச் சார்பின்மைக்கு விரோதமும் ஆகும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்., பாரத ரத்னா விருது ஏன்?.

No comments: