Dec 18, 2014

மதவாதத்திற்கு எதிராக அணி திரள்வோம்!

டிசம்பர் 18/14: இந்திய தேசம் சுதந்திரம் பெற்று 67 ஆண்டுகள் கடந்தும் பாதுகாக்கப்பட்டு வரும் இந்திய அரசியல் அமைப்பு சட்டம் வழங்கியுள்ள மதசார்பின்மை  அம்சங்கள் தற்போதைய பாசிஸ ஆட்சியாளர்களால் தகர்க்கப்பட்டு வருவது வன்மையாக கண்டிக்கத்தக்கதாகும்.

சாதி,மதம்,இனம்,மொழி,கலாச்சாரம் போன்ற வேற்றுமையில் ஒற்றுமையே இந்தியாவின் சிறப்பம்சம் என்று உலக நாடுகள் பலவும் வியந்து போற்றிவரும் இவ்வேளையில், பாசிஸ சித்தாந்தம் கொண்ட மோடி தலைமையிலான பாஜக அரசு இந்து மதம்,இந்து நாடு என்ற மத பிரிவினையை கையிலெடுத்து கொண்டு ஹிந்தி,சமஸ்கிருதத்தை கட்டாய மொழியாகவும்,பகவத் கீதையை தேசிய புனித?நூலாகவும் அறிவிக்க முயற்சிப்பது சிறுபான்மை சமுதாய மக்களை அச்சுறுத்தும் செயலாகும்.

ஒவ்வொரு மதத்தவர்களுக்கும் அவரவர் சார்ந்துள்ள மதங்களின் வழிகாட்டல் நூல்களே புனிதமானவையாக இருக்கும் போது இந்து மதத்தின் பகவத் கீதையை முஸ்லிம்கள்,கிருஸ்துவர்கள்,சீக்கியர்கள்,ஜைனர்களின் மீது கட்டாயமாக திணிக்க முற்பட்டால் சோவியத் ரஷ்யாவை போல பல்வேறு கூறுகளாக தேசம் பிளவு பட்டுவிடும் பேராபத்தை ஒவ்வொரு இந்தியனும் உணர வேண்டும்.

உள்ளம் முழுவதும் மத துவேசத்தை சுமந்து கொண்டு நல்லவர்களை போல உலக நாடுகளை ஏமாற்றி வரும் மோடி தலைமையிலான பாசிஸ அமைச்சர்களின் மதசார்பு நடவடிக்கைகளை உலகம் முழுவதும் கொண்டு செல்ல வேண்டிய கடமை ஒவ்வொரு இந்தியனுக்கும் உண்டு. தேசிய,மாநில அளவிலான மதசார்பின்மை அரசியல் கட்சிகள் அனைத்தும் ஓரணியில் கைகோர்த்து, மதத்தின் பெயரால் நாட்டை பிளவு படுத்த முயற்சிக்கும் பாசிஸ சக்திகளை எதிர்கொள்வது காலத்தின் கட்டாயம். அதற்காக இன்னொரு சுதந்திர போராட்டம் தேவைப்படின் அதையும் எதிர்கொள்வோம். பாசிஸத்தை வேரறுத்து, ஜனநாயகத்தை பாதுகாப்போம்.

1 comment:

Anonymous said...

ஏம்பா கோட்சே க்கு சிலை வேக்க போறன்னு சொல்றிங்களே
அந்த கோட்சே சிலை கைல ‪#‎இஸ்மாயில்‬-ன்னு பச்சை குத்துவிங்கள ?
குத்த மாட்டிங்கள ?