Sep 21, 2013

ஹிட்லரின் வாரிசே! இந்தியாவின் ராஜபக்சேவே! வருக! வருக!

செப் 21: ஏகாதிபத்திய கைக்கூலி, உழைக்கும் மக்களின் எதிரி  கொலைகார மோடி திருச்சிக்கு வருவதை கண்டித்து மகஇக மற்றும் அதன் தோழமை அமைப்புக்களால் பிரச்சார இயக்கம் முழு வீச்சுடன் நடத்தப்பட்டு வருகிறது.

பெரியார் பிறந்த மண்ணில் காவிப்படைகளுக்கு கல்லறை கட்டுவோம். மோடியின் வருகைக்கு மௌனம் சாதித்து வரும் பெரியாரை வைத்து பிழைப்பு நடத்தும் பிழைப்புவாதிகளையும், ஓட்டுக்கட்சிகளையும் முடிவுக்கு கொண்டு வருவோம்.

உழைக்கும் மக்களிடையே பாஜக, ஆர்.எஸ்.எஸ் காவிகளின் பொய்பிரச்சாரத்தின் மூலம் பூதாகரமாக சித்தரிக்கப்பட்ட மோடியின் முகம் மக்கள் கலை இலக்கியக் கழகம் மற்றும் அதன் தோழமை அமைப்புகளின் பிரச்சாரத்தால் கிழிந்து தொங்குகிறது.

தினமும் ஆயிரக்கணக்கான பிரசுரங்கள் மக்களிடையே விநியோகிக்கப்பட்டு வருகின்றன. 22-ம் தேதி தோழர் மருதையன் பேசவிருக்கும் பொதுக் கூட்டத்திற்க்காக சிக்னல்  சந்திப்புகளில் பிரச்சாரம், வேன் பிரச்சாரம், தெருமுனைக் கூட்டங்கள் என பல்வேறு வகையான பிரச்சாரங்கள் செய்யப்பட்டு வருகின்றன. தோழர்கள் பலரும் விடுப்பு எடுத்துக் கொண்டு திருச்சி நகரை கலக்கி வருகிறார்கள்.

தமிழகத்தில் சீந்துவாரின்றி இருந்த இந்துமதவெறி அமைப்புகளும், பாஜகவும் மோடியின் வருகையை வைத்து தம்மை பலப்படுத்திக் கொள்ள துடிக்கின்றன. இந்நிலையில் பார்ப்பனிய எதிர்ப்பில் இந்தியாவிற்கே முன்னோடி மாநிலமாக இருந்த தமிழகத்தில், தந்தை பெரியாரின் சுயமரியாதை மண்ணில் மோடி வருகிறார் என்பது நமது சமூக அக்கறைக்கு விடப்பட்டிருக்கும் சவால். எனவே இந்த சவாலை எதிர்கொள்ள தமிழர்கள் ஓரணியில் திரள வேண்டும்.

செப்டம்பர் 22 – ஞாயிறு – மாலை 6.00 மணி புத்தூர் நால்ரோடு, உறையூர்,  திருச்சி. நோக்கி மக்கள் அலைகடலனே திரண்டு வாருங்கள் என்று அன்போடு அழைக்கப்படுகின்றனர்.  

4 comments:

Seeni said...

mmmmmmm.......

faizeejamali said...

good job

Anonymous said...

நீ பொய் பெயரில் எழுதினால் மட்டும் உன்னை தெரியாதா? இஸ்லாம் மதவெறி பிடித்த சொறி நாயே, மோடி ஒரு பிற்படுத்த பட்ட வகுப்பை சேர்ந்த தேசபக்தர் என்று பள்ளி குழைந்தைகளும் அறியுமடா.அவருக்கு பூணூல் போட்டு அவரை பார்பனராக மாற்றி கதை கட்டி விடாதே. இனி உன் போன்ற மத வெறியர்களின் ஆட்டம் இங்கு நடக்காது.
நடப்பது 2013 டா மூடனே, இன்னுமா உன்ன இத்துப்போன பகுத்தறிவு பரப்புரைகளை இங்கு வியாபாரம் செய்கிறாய்?

PUTHIYATHENRAL said...

1) மோடி ஒரு பிற்படுத்த பட்ட வகுப்பை சேர்ந்த தேசபக்தர் என்று பள்ளி குழைந்தைகளும் அறியுமடா!. அவருக்கு பூணூல் போட்டு அவரை பார்பனராக மாற்றி கதை கட்டி விடாதே!

கருத்தின் ஆரம்பத்தில் நம்மை திட்டுகிறார் பரவாயில்லை பொறுத்து கொள்வோம். மோடி பிற்படுத்த பட்ட வகுப்பை சேர்ந்தவர் என்பதை யாரும் மறுக்க வில்லை. அதற்காக அவர் போட்ட வெறியாட்டத்தை மறக்க வேண்டும் என்று ஒரு பிற்படுத்தபட்ட மக்களோ, அமைப்புகளோ விரும்பவில்லை. பயங்கரவாதிக்கு என்ன சார் மதம், இனம், மொழி. குஜராத் கலவரத்தை நடத்திய இரத்த வெறிபிடித்த ஒரு காட்டேரியை தேச பக்தர் என்று சொல்வது உங்களின் அறியாமையின் வெளிப்பாடு. மோடியை யாரும் பார்பனர் என்று சொல்லவில்லை மோடிக்கு பின்னால் இருந்து இயக்கும் ஆர்.எஸ்.எஸ். மற்றும் ஹிந்துத்துவா அமைப்புகளை பற்றியே அந்த சுவேரொட்டி குறிப்பிடுகிறது. இந்தியாவில் உள்ள குழந்தைகளுக்கு மோடி ஒன்றும் தேச பக்தர் என்று தெரியாது. மோடி என்றாலே இரத்த வெறி பிடித்த மிருகம் என்று தெளிவாக தெரியும். ஆர்.எஸ்.எஸ். நடத்தும் பள்ளிகள் வேண்டுமானால் மோடியை தேசபக்தர் என்று புளுகி வைத்திருப்பார்கள். மற்றபடி இப்பொழுது உள்ள குழந்தைகள் ரொம்ப உஷார் .