செப் 23/2013: தேமுதிக9வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் தூத்துக்குடியில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசினார் பிரேமலதா விஜயகாந்த்,
மக்கள் பிரச்சனைகள் பற்றி விஜயகாந்த் கேள்வி எழப்பினால் அவதூறு வழக்குகளை போடுகிறார்கள். இந்த வழக்குகளை எல்லாம் கண்டு விஜயகாந்த் ஒருபோதும் அஞ்ச மாட்டார். இந்தியாவின் அடுத்த பிரதமரை தீர்மானிக்கும் சக்தியாக விஜயகாந்த் இருப்பார்.
சிந்திக்கவும்: வெத்து வேட்டு விஜயகாந்த் இவர் என்பது இவரது மனைவிக்கு தெரியாதா என்ன? விஜயகாந்த் பாகிஸ்தான் தீவிரவாதிகளோடு படத்தில் சண்டை போட்டு நாட்டை காப்பாற்றும் கேப்டன் என்று மக்களை நம்ப வைத்து எம்.ஜி.ஆர். பாணியில் ஆட்சியை பிடிக்கலாம் என்று பார்த்தார். எம்.ஜி.ஆர்.ருடன் அந்த சரித்திரம் முடிந்தது. இனி மேலும் இந்த கூத்தாடிகளை தமிழகம் கொண்டாடாது என்று நம்புவோம்.
சினிமாவில் சம்பாதித்த பணத்தை கொண்டு கட்சி ஆரம்பித்தார். நமது தமிழக ஓட்டு பொருக்கி கட்சிகள் இவரை கூட்டணியில் சேர்த்து கொண்டதால் பிச்சையாக கிடைத்த கொஞ்சம் சீட்டை வைத்து ஆட்டம் போடுகிறார். இது எத்தனை நாளைக்கு என்று பார்ப்போம். இந்தியாவின் பிரதமரை இவர் தேர்ந்தடுக்கும் அளவுக்குத்தான் இந்தியாவின் நிலைமையும் இப்பொழுது இருக்கிறது என்பது என்னவோ உண்மைதான். புல்லரசு இந்தியா காங்கிரஸ், வியகாந்த், மோடி போன்றோர் கைகளில் ஒளிரும் என்பதில் சந்தேகம் என்ன இருக்கிறது.
No comments:
Post a Comment