குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் திருச்சி வருகைக்கு எதிராக தமிழகம் முழுவதும் கண்டன குரல்கள் எழுந்துள்ளன. மேலும் மோடியின் வருகைக்கு எதிராக தெருமுனைக் கூட்டங்கள், மனித சங்கிலி போராட்டங்கள் ஆகியவை நடைபெற்று வருகின்றன.
மோடியை எதிர்த்து ம.க.இ.க அமைப்பு தெருமுனைக் கூட்டங்கள், நாடகங்கள் மேலும் திருச்சி முழுவதும் லட்சக்கணக்கான துண்டு பிரசுரங்களையும் விநியோகித்து அதன் மூலம் பிரச்சாரம் செய்து வருகின்றனர், கேம்பஸ் ப்ரண்ட் என்ற மாணவர் அமைப்பு நடத்த இருந்த பேரணியை காவல் துறையினர் தடுத்துள்ளனர்,
மேலும், குஜராத் மாநிலத்தில் முஸ்லீம்களின் மீது நடத்தப்பட்ட கலவரத்திற்கு காரணமான அம்மாநில முதல்வரும், பாஜகவின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடியை கண்டித்து நேஷனல் விமன்ஸ் ப்ரண்ட் சார்பாக திருச்சியில் (21-09-2013) மனித சங்கிலி மற்றும் கண்டன போராட்டம் நடைபெற்றது
நேஷனல் விமன்ஸ் ப்ரண்ட் திருச்சி மாவட்ட தலைவி மெஹராஜ் பானு ஆலிமா தலைமை தாங்கினார். மாவட்டச்செயலாளர் சித்திக்கா வரவேற்புரை ஆற்றினார் மாநில தலைவி பாத்திமா ஆலிமா நரேந்திர மோடியை கண்டித்து கண்டன உரையாற்றினார் .இதில் பெண்கள் மற்றும் குழந்தைகள் கலந்து கொண்டு மோடியை கண்டித்து கண்டனத்தை பதிவு செய்தனர்.
No comments:
Post a Comment