புதுடெல்லி- ஜம்முகாஷ்மீருக்கு சுயாட்சி வழங்கலாம் என்று பிரதமர் நியமித்த குழு அளித்துள்ள பரிந்துரைக்கு தீவிரவாத பா.ஜ.க. கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு காண்பதற்காக பிரதமர் மன்மோகன் சிங் 2006ம் ஆண்டு மார்ச்சில் வட்டமேஜை மாநாடு மூலம் பேச்சு நடத்தினார். அப்போது செயல் திட்டங்களை தயாரித்து தருவதற்காக 5 செயல் குழுக்கள் அமைக்கப்பட்டன. 4 குழுக்களின் அறிக்கைகள் 2007 ஏப்ரலில் தாக்கல் செய்யப்பட்டன. ஓய்வு பெற்ற நீதிபதி எஸ். சகீர் அகமது தலைமையிலான ஐந்தாவது குழுவின் அறிக்கை இப்போது தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், ஜம்முகாஷ்மீருக்கு தேசிய மாநாடு கட்சி கோருவது போன்ற சுயாட்சி வழங்கலாம் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
கலவர பகுதி சட்டத்தின்கீழ் ராணுவத்துக்கு அளிக்கப்படும் சிறப்பு அதிகாரத்தை ரத்து செய்வது உள்பட பல்வேறு பரிந்துரைகளை இக்குழு செய்துள்ளது. மேலும் 1953ம் ஆண்டு முதல் காஷ்மீருக்காக மத்திய அரசு இயற்றிய அனைத்து சட்டங்களையும் ரத்து செய்ய வேண்டும் என்ற தேசிய மாநாடு கட்சியின் கோரிக்கைக்கும் ஆதரவு தெரிவித்துள்ளது.
இந்த பரிந்துரைகளுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் மன்மோகன் சிங்குக்கு தீவிரவாத பா.ஜ.க தலைவர் தீவிரவாதி அருண் ஜெட்லி அனுப்பியுள்ள கடிதத்தில்,"இந்த செயல் குழு 2007 செப்டம்பர் 7க்குப் பிறகு கூடவே இல்லை. இது ஓய்வு பெற்ற நீதிபதி அகமதுவின் தனிப்பட்ட கருத்து. கேலிக்கூத்தாக உள்ள இந்த பரிந்துரைகளை அரசு ஏற்கக் கூடாது" என்று கூறியுள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment