Dec 27, 2009
பீஹார் மாநிலத்தில் பள்ளிக் கூடம் வெடி வைத்து தகர்ப்பு
இந்தியாவின் பிஹார் மாநிலத்தில் மாவோயிய கிளர்ச்சிகாரர்கள் என்று சந்தேகிக்கப்படும் நபர்களால் அரசாங்கப் பள்ளிக்கூடக் கட்டிடம் ஒன்று வெடி வைத்துத் தகர்க்கப்பட்டுள்ளதாக பொலிசார் கூறுகின்றனர்.
அவுரங்காபாத்தில் உள்ள இந்தப் பள்ளிக்கூடத்தை இறுநூறுக்கும் அதிகமான கிளர்ச்சிக்காரர்கள் சூழ்ந்து முற்றுகையிட்டு, பின்னர் அதனை டைனமைட் வெடிவைத்து தகர்த்துள்ளனர் என்று பொலிசார் தெரிவிக்கின்றனர்.
பள்ளிக்கூடத்தின் ஒரு பகுதி சேதமடைந்துள்ளது. இந்த சம்பவத்தில் யாருக்கும் காயமோ உயிரிழப்போ ஏற்படவில்லை.
கிளர்ச்சிக்காரர்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படும் துருப்பினர் இப்படியான பள்ளிக் கட்டிடங்களில்தான் தங்கவைக்கப்படுகிறார்கள் என்று மாவோயியவாதிகள் அரசாங்கத்தினரைக் குற்றம்சாட்டுகின்றனர்.
பிஹார் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில் கடந்த ஓராண்டில் மட்டும் சுமார் நாற்பது பள்ளிக்கூடங்கள் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment