Dec 27, 2009

உலகிலேயே முதன்மை அதிவேக ரயில் சீன உருவாகிறது


மத்திய சீனாவிலுள்ள வுஹான் ரயில் நிலையத்தில் உலகிலேயே அதிவேக விரைவு ரயிலின் இறுதிகட்டப் பணிகள் நடந்து வருகின்றன. குவாங்கோ - வுஹான் நகரங்களை இணைக்கும் 1,069 கி.மீ இருப்புப் பாதையை 3 மணிநேரங்களில் கடக்கும் வல்லமை கொண்டதாக இப்புதிய மீவேக ரயில் வடிவமைக்கப் பட்டிருப்பதாக சின்ஹுவா செய்தித்தாள் தெரிவிக்கிறது.
சராசரியாக மணிக்கு 350 கிமீ அல்லது 270 மைல் வேகத்தில் பயணிக்கும் என்று சொல்லப்படுகிறது. அதாவது திருச்சி-சென்னைக்கு ஒரு மணிநேரத்தில் சென்றிடலாம்!

2005ஆம் ஆண்டு தென்சீனாவின் தொழில் நகரமான குவாங்கோ மற்றும் ஹாங்காங் நகரங்களை தலைநகர் பெய்ஜிங்குடன் இணைக்கும் நோக்கில் இம்மீவேக ரயில் உருவாக்கப்பட்டது. மணிக்கு 394.2 கி.மீ வேகம் கொண்ட இந்த ரயில் உலகிலேயே முதன்மை அதிவேகரயில் ஆகும். டிசம்பர் முதல் வாரத்தில் சோதனை வெள்ளோட்டம் இடப்பட்ட இந்த ரயில் உத்தியோகப்பூர்வமாக நேற்று வுஹான் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டது.

பிற நாடுகளின் சூப்பர் பாஸ்ட் ரயில்களுடன் ஒப்பிடும்போது 243 கி.மீ வேகம் கொண்ட ஜப்பானின் அதிவிரைவு ரயில் மற்றும் 277 கி.மீ வேகங்கொண்ட பிரான்ஸின் அதிவிரைவு ரயில்களைவிட அதிவேகம் கொண்டது என வடிவமைப்பாளாரும் தலைமை பொறியாளருமான சூபாங்லிங் தெரிவித்தார்.

சீனாவின் அதிவேக ரயில் கடந்த 2008 பெய்ஜிங் ஒலிம்பிக்கின்போது அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் 42 அதிவேக ரயில் பாதைகளை உருவாக்கப் போவதாக அறிவித்துள்ளது. உலகின் முன்னணி நிறுவனங்களான சீமென்ஸ், பாம்பார்டைர் அண்ட் ஆஸ்டம் ஆகியவை தொழில் நுட்ப உதவிகளை வழங்கியுள்ளன.

No comments: