Dec 27, 2009
இலங்கைக்கு சீனா 2050 கோடி நிதியுதவி
கொழும்பு: இலங்கையின் கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகளின் வளர்ச்சிக்காக சீன அரசு 2,050கோடி ரூபாயை நிதியுதவி அளித்துள்ளது. இது குறித்து இலங்கை வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை: சீனா மற்றும் இலங்கை அதிகாரிகளுக்கு இடையே நிதியுதவி அளிப்பது தொடர்பாக முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இலங்கையின் மாத்தளையில் புதிய சர்வதேச விமான நிலையம் அமைப்பது உள்ளிட்ட முக்கியமான கட்டமைப்பு பணிகளுக்காக இலங்கைக்கு, சீனா 2,050 கோடி ரூபாய் நிதியுதவி அளிக்கஉள்ளது.
சாலை, ரயில் பாதை மற்றும் கட்டட வேலைகள் தொடர்பான பணிகளை விரைந்து மேற்கொள்வதற்கு அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாகவே சீனாவிடம் இருந்து நிதியுதவி பெறப்பட்டுள்ளது.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப் பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment