கடந்த 22-12-09 அன்று சென்னை ஸ்டான்லி ஹாஸ்பிடல் வளாகத்தில் உள்ள மசூதியை அகற்ற முடிவு செய்தனர். இந்த நிலையில் மசூதியை அகற்றும் முடிவைக் கண்டித்து 22-12-09 அன்று முஸ்லிம் அமைப்புகள் சார்பில் ஸ்டாலின் ஹாஸ்பிடல் முன்பு சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா ,த.மு.மு.க, சுன்னத் ஜமாத் ஐக்கிய பேரவை, இஸ்லாமிய ஐக்கிய கட்சி, உள்ளிட்ட அமைப்புகளை சேர்ந்த 500-க்கு மேற்பட்ட முஸ்லிம்கள், தங்கள் அமைப்புகளின் கொடிகளுடன் இந்த போராட்டதில் கலந்து கொண்டன.
போராட்டத்தை தொடர்ந்து ஸ்டாலின் ஆஸ்பத்திரி முதல்வர் பிரியா போராட்டத்தில் ஈடுபட்ட அமைப்புகளின் பிரதிநிதிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது மசூதியை அகற்றுவதற்க்கு முன்பாக ஸ்டான்லி ஆஸ்பத்திரி வளாகத்தில் புதிய மசூதியை கட்டி தரவேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இதனால் மசூதி இடிப்பது நிறுத்தப்பட்டது
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment