ஏப்ரல் 13, திமுக எம்.எல்.ஏ. ராஜன் இன்று அதிமுகவில் சேர்ந்தார். நாளை சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில் ராஜன் அதிமுகவில் இணைந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகர்கோவில் புதுக்குடியிருப்பில் வசித்து வரும் ராஜனுக்கு கட்சி தலைமை இந்த முறை சீட் வழங்கவில்லை. இதனால் அதிருப்தியில் இருந்து வந்த ராஜன் அதிமுகவில் இணைய முடிவெடுத்தார்.
அவர் அதிமுக அமைப்பு செயலாளர் தளவாய் சுந்தரத்தை தொடர்ப்பு கொண்டார். இதையடுத்து தளவாய் சுந்தரம் இன்று ராஜன் வீட்டிற்கு சென்றார். தளவாய் சுந்தரம் முன்னிலையில் ராஜன் அதிமுகவில் இணைந்தார்.
பின்னர் ராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், திமுக தலைவர் கருணாநிதி கட்டுப்பாட்டில் திமுக இல்லை. அதனால்தான் திமுகவில் இருந்து வெளியேறுகிறேன் என்று குற்றம் சாட்டினார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment