Sep 20, 2013

தமிழருவி மணியனுக்கு ஏன் இந்த வேண்டாத வேலை!




செப் 21/2013: அரசியல்வாதியும் எழுத்தாளருமான. இவர் அருவியில் நீர் கொட்டுவதைப் போல், வார்த்தைத் தடுமாற்றம் இன்றி பேசுவார். 
இதை கேட்ட தமிழக முன்னாள் முதலமைச்சர்  காமராசர் இவரை தமிழருவி  என்று பாராட்டினார். அதுமுதல் இவர் தமிழருவி மணியன் என அழைக்கப்படுகிறார். சமீபத்தில் மறக்க முடியாத மனிதர்கள் என்ற பெயரில் ஒரு புத்தகம் ஒன்றையும் வெளியிட்டிருந்தார்.

இவர் தமிழ்நாடு காந்திய மக்கள் இயக்க மாநில தலைவராவார். சிறந்த தமிழ் புலமை மிக்கவராகவும், காந்திய சிந்தனை கொண்டவராகவும் எல்லோராலும் அறியப்பட்டவர். இவர் வரும் லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு எதராக மோடியை ஆதரித்து மோடியை பிரதமராக்க பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். 

இதன் காரணாமாக தமிழர்களால் இதுவரை புறக்கணிக்கப்பட்ட பாரதிய ஜனதா கட்சியை வலுப்படுத்த அவர்களது கூட்டணிக்கு ஆள்பிடிக்கும் வேளையில் இறங்கி இருக்கிறார். பாரதிய ஜனதா கூட்டணியில் தேமுதிக வையும், மதிமுகவையும் இணைக்க கடும் முயற்சி செய்து வருகிறார். அத்தோடு நில்லாமல், ரஜினியை இந்த கூட்டணிக்கு ஆதரவு தெரிவிக்க செய்ய தலைகீழாய் தவமிருக்கிறார். இவருக்கு ஏன் இந்த வேண்டாத வேலை. 

தமிழர் நலனில் இதுவரை பாரதிய ஜனதா எந்த அக்கறையும் காட்டியதில்லை. ஈழத்து இன அழிப்பு முதல் கூடங்குளம் அணு உலை விவகாரம் வரை தமிழர்களுக்கு விரோதமாக செயல்படும் இந்த பாசிச ஹிந்துத்துவா கூட்டத்தை ஆதரிக்க இவருக்கு எப்படித்தான் மனது  வந்ததோ. காங்கிரஸ் கட்சிக்கு எதிராக ஒரு மாற்றம் தேவை என்பதற்காக கொலைக்கார மோடியின் கைகளை வலுப்படுத்துவாதா?இதுவே தமிழர்கள் இவரை நோக்கி கேட்க்கும் கேள்வி. தமிழ் சிந்தனைவாதியும், காந்தியவாதியுமான இவர் தனது தவறை திருத்தி கொள்வாரா? இல்லையேல் இவரை தமிழர்கள் மன்னிக்க மாட்டார்கள். 

4 comments:

Anonymous said...

நீதான் தமிழர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்ற முதல் பிரதிநிதி.நீ சொன்னால் அது தமிழர்கள் சொன்னது மாதிரி?
கலக்கம் செய்து பிழைப்பதே உன்போன்றவர்களின் வேலை.

உனக்கு ஏன் இந்த வேண்டாத வேலை?

Anonymous said...

modi is a great achiever without corruption in his state and good habitation. How dare you criticise him like this. Did you think you are only one representative of tamil peoples.Mind your words against Thir.Modi

Anonymous said...

காங்கிரஸ் ஐ கருவறுக்க வேண்டும் என்பதே முக்கியம்.அதற்கு யாரை பயன் படுத்தினாலும் தப்பில்லை.

Anonymous said...

YES. YOU ARE RIGHT.
WE SHOULD CALL PAKISTANI LEADERS TO RULE THIS COUNTRY.
SHARIYAT LAW TO BE ENFORCED.
ATLEAST AZAM KHAN TO BE MADE AS PM/